Monday, 30 May 2016

[www.keralites.net] 18 Precautions To Reduce Cell Phone Radiation Exposure

 







Two mails






Subject: 18 Precautions To Reduce Cell Phone Radiation Exposure
 The number of cell phones are ever increasing and might exceed our Indian / world population in due course, it is better to be aware of all these precautions and avoid avoidable health issues in our society.
Please pass this on to others too.
- SIVA
 
18 Precautions To Reduce Cell Phone Radiation Exposure
 
 Thanks to Sun Seeker for posting these 18 precautions in using cell phones.
 - SIVA
 
 
 
 
 
''பணம் வேண்டாம்  நீயே வெச்சுக்கோ'' ​
 
 
''நீங்க  யாரோ  ஒரு  பெயரை சொன்னீர்களே  அது யார் ?''   மொட்டைத் தலையை தடவியவாறே  மோகன சுந்தரம் கேட்டார்.

''
அதுவா, அவர் தான்  தட்டச்சு  வரகூறான்  என்ற  அருமையான மனிதர். முக நூல் நண்பர்.  ரொம்ப  சர்வ  சாதாரணமாக  பல  பக்தர்களின் பெரியவா அனுபவங்களை  எங்கிருந்தெல்லாமோ  பிடித்து  வாரி வழங்கிவருகிறார்.  எனக்கு அவரது தொகுப்புகள் ரொம்ப பிடிக்கும். விடாமல் படிப்பேன். அதிலே இது ஒன்று.
எப்பவோ எடுத்து வைத்திருந்தேன். இன்று காலை கண்ணில் பட்டது.  அவர் எழுதியதை 
படிக்காத  மற்றவர்களையும் அடையட்டுமே  என்று கொஞ்சமாக  மாற்றி (தேவை என்று எனக்கு பட்டதால்)  சுருக்கியும் கூட  சொல்றேன்''

தாத்தா  சொன்ன விஷயம்:

அப்போது  பெரியவாள் கலவையில் முகாம்.

வெல்லத்தை   மொய்ப்பது போல் எங்கிருந்தெல்லாமோ  பக்தர்கள் வரிசையாக வந்து தரிசனம் பெற்றார்கள். இது வழக்கமாக பெரியவா எங்கிருந்தாலும் நடப்பது

அன்றைக்கு காலை  ஒரு தஞ்சாவூர் வக்கீல் குடும்ப சகிதம்
​​
 வந்தார்
​. 
.ஏக தடபுடல்,
​ 
மனைவி-மடிசார். பையன்கள்,வேட்டி-துண்டு.
​  வக்கீல்  பட்டு வேஷ்டியிலே 
பஞ்சகச்சம்-அங்க வஸ்திரம்,நவரத்தினமாலை இத்யாதி.

பெரிய தட்டில் பழங்கள்,புஷ்பம்,கல்கண்டு,திராட்சை,முந்திரிப் பருப்பு,தேன் பாட்டில் அத்துடன் ஒரு காகித
உறையில்
​ 
 சில
​ 
ரூபாய் நோட்டுகள்.பெரியவாள் முன்னிலையில் சமர்ப்பணம் செய்து,
குடும்பமே  ​
நமஸ்காரம் பண்ணினார்கள்.

பெரியவாளின்  கண்கள் அந்தத் தட்டை
ஒரு கணம் 
பார்த்தன.

"
அது என்ன, கவர்?"

"
ஏதோ.....கொஞ்சம் பணம்..."

"
கொஞ்சம்னா?...பத்து ரூபாயா, பதினோரு ரூபாயா?"

வக்கீலின் நெஞ்சில் தான் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே
​ 
பெரிய பிரபல கிரிமினல்
​ 
லாயர்  என்ற கர்வம்.  தன்னைப் போய்  இந்த கிழவர் இவ்வளவு
​ 
மட்டமாக  எடை போட்டிருக்கிறாரே?  நான் எவ்வளவு பெரிய
அட்வகேட், என்னைப் பார்த்து  பத்து ரூபாயா  பதினொன்று ரூபாயா ??  என்றா கேட்பது.  நான் யார் என்று தெரிய
​ 
 வேண்டாமா?..

நடிப்பான பவ்யத்துடன்,
எல்லோருக்கும் கேட்கவேண்டும் என்று  உரத்த குரலில்  ​
"
​ 
பத்து பதினொன்று இல்லை பெரியவா, பதினைந்தாயிரம் ரூபாய்," என்றார்.

பெரியவா சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டுக்
​ 
கேட்டார்;

"
நீ எதில் வந்திருக்கே?"

"
காரில்
​ 
தான் தஞ்சாவூர்லேருந்து இங்கே வந்திருக்கோம்..."
இதுவும் உரத்த குரலில் எல்லோருக்கும் கேட்கவேண்டும் என்பதற்காக.

"
அந்தக் கவரை எடுத்துக்கொண்டு போய் காரில் பத்திரமாக
​ 
வைத்துவிட்டு வா. பழம்,புஷ்பம் போதும்..."

அட்வகேட் வெலவெலத்துப் போய் விட்டார்.
​  ​
பெரியவா சொன்னபடியே செய்தார்.

அவரிடம் வெகு சாந்தமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து
​ 
விட்டு, பிரசாதம் கொடுத்து அனுப்பினார்கள்.
கார் புறப்பட்டுச் சென்ற சத்தம் கேட்டது.
​''​
பெரியவா பதினையாயிரம் ரூபாயை
​ 
வேண்டாம் என்று உதறிவிட்டாரே. ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாரே?" என்ற பொருமல் சிஷ்யர்களுக்குஇருக்கும் என்பது பெரியவாளுக்குத் தெரியாதா என்ன?

"
நான்  ஏன்  வேண்டாம்னுட்டேன்.  ஒரு பொய் வழக்கில்
அதர்மமா ​
வாதாடி இவர் ஜெயித்து அதுலே கிடைத்த பீஸில்,ஒரு பங்குதான் இந்தப் பதினைந்தாயிரம்.
​ 
பாப சம்பாத்யம். அதனால் தான்
​ 
'இங்கே அது வேண்டாம் னுட்டேன்.'

தொண்டர்களுக்குத் தெளிவு உண்டாயிற்று.
​ ​
ஸ்ரீ மடத்துக்கு, அவர்  காலத்திலேயே  அடிக்கடி பொருள்
கள்,
, பண
தட்டுப்பாடு வருவதுண்டு. மானேஜர் கவலைப்படுவார்,
​ 
அப்போது கூட, "எப்படியாவது பணம் கிடைத்தால் சரி"
என்று எல்லோருடைய பணத்தையும் பெரியவாள்
​ 
ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை.

"
ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே
வழக்கமாகி விடும்."
என்பார் பெரியவா.

 
​''​
அரிசியை யாரேலேயும் சாப்பிட முடியாது. தண்ணீரும், அக்னியும் அதை ஹவிஸ் ஆக்கறது. அப்போ அதும் பேரு அரிசி இல்லே. அன்னம், உமி நீக்கறதுக்கு முன்னே அது பேரு நெல். அதையே முத்தவிட்டு எடுத்து வைச்சா விதை. பக்குவப்படறத்துக்கு முன்னே அதை நாத்துங்கறோம். அதே அரிசியை எந்திரத்திலே அரைச்சு மாவாக்கிட்டா வேற வேற சாமான் சேர்த்து 'அப்பம், சீடை, முறுக்குன்னு பேர் வைக்கறோம்.

நாத்தா இருக்கற நாம நெல்லா பூமியைப் பாக்கறோம். பக்குவப்பட்டவர்கள்  எல்லாம் விதையாயிடறா! அக்னியும் தண்ணீரும் சுக துக்கங்களாறது. உமியை விலக்கிட்டு பொறுப்பு வந்துட்டதாக குதிக்கிறோம்.அது தான் அரிசி கொதிக்கி
றா
ப்பலே. லோகப் பசியை நீக்க அவாவாளானதைச் செய்யறா.
​ 
கீழே  
சிந்
துகிற 
 அரிசி கூட பறவைகளுக்கும், எறும்புக்கும்
உணவாகி  ​
பசியைத் தீர்க்கறது. இந்த உலகத்திலே வேண்டாதது எதையும் பகவான் படைக்கறதில்லே. முள்ளு செடி கூட தோட்டத்தை காவல் காக்கறது. வாய்க்கால் கரையிலே இருக்கற சாதா
ரண காட்டுச் ​
செடிகள் கூட
​ 
ஆத்தங்கரை  மண்ணு சரியாம வேரால பலப்படுத்துகிறது.
​''​
 
​''பெரியவா பெரியவாதான் தாத்தா சார்''  என்று  என் அறையில் இருந்த பெரியவா படத்துக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு மோகனசுந்தரம் நடையைக் கட்டினார். ​
 
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment