Tuesday, 3 January 2017

[www.keralites.net] Scientists discover a new human organ - mesentery

 

Scientists discover a new human organ

London: Irish scientists have recently identified a new human organ that has existed in the digestive system for hundreds of years.

Named as the mesentery, the organ connects the intestine to the abdomen and had for hundreds of years been considered a fragmented structure made up of multiple separate parts.

However, researchers led by J Calvin Coffey, Professor at University of Limerick (Ireland), describe the mesentery as an undivided structure and outlined the evidence for categorising the mesentery as an organ in the paper published in the journal The Lancet Gastroenterology and Hepatology.


Mesentery is a fold of the peritoneum which attaches the stomach, small intestine, pancreas, spleen, and other organs to the posterior wall of the abdomen.

During the initial research, the researchers found that the mesentery, which connects the gut to the body, was one continuous organ.


"Up till then it was regarded as fragmented, present here, absent elsewhere and a very complex structure. The anatomic description that had been laid down over 100 years of anatomy was incorrect. This organ is far from fragmented and complex. It is simply one continuous structure," Coffey explained.

Better understanding and further scientific study of the mesentery could lead to less invasive surgeries, fewer complications, faster patient recovery and lower overall costs.

"When we approach it like every other organ...we can categorise abdominal disease in terms of this organ," Coffey said.

According to Coffey, mesenteric science is a separate field of medical study in the same way as gastroenterology and others.

"Up to now there was no such field as mesenteric science. Now we have established anatomy and the structure," Coffey noted.


http://www.newsx.com/health-and-science/51588-scientists-discover-a-new-human-organ



__._,_.___

Posted by: Ravi Narasimhan <ravi.narasimhan.in@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] : வரலாற்றில் இன்று🌏 2017 புத்தாண்டில் வெற்றிபெற 14 வழிகள்

 




Subject: வரலாற்றில் இன்று🌏 2017 புத்தாண்டில் வெற்றிபெற 14 வழிகள்

 
LENGTHY MAIL
 
 
 
 
 
 
வரலாற்றில் இன்று🌏
 
🌳🌳🌳 4 JAN  2017🌝🌝🌝
          திருவள்ளுவர் ஆண்டு
  🐾🐾 20 மார்கழி 2047🐾🐾
 
 
 
🔸நிகழ்வுகள் 4 January 1493 (524 years ago): கொலம்பஸ் தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.
 
🔸நிகழ்வுகள் 4 January 1847 (170 years ago): சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விலைக்கு விற்றார்.
 
🔸நிகழ்வுகள் 4 January 1854 (163 years ago): கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.
 
🔸நிகழ்வுகள் 4 January 1958 (59 years ago): முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.
 
🔸நிகழ்வுகள் 4 January 1959 (58 years ago): லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.
 
🔸நிகழ்வுகள் 4 January 2004 (13 years ago): ஸ்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐��💐💐
 
பிறப்பு
 
🎂பிறப்புகள் 4 January 1643 (374 years ago): (பழைய யூலியன் நாட்காட்டியில் டிசம்பர் 25, 1642) சர் ஐசக் நியூட்டன், ஆங்கில அறிவியலாளர் (. 1727)
 
🎂பிறப்புகள் 4 January 1809 (208 years ago): லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தைக் கண்டுபிடித்த பிரான்சியர் (. 1852)
 
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
 
🔆 ஸ்ரீமத் பகவத் கீதை 🔆
 
1⃣5⃣*பதினைந்தாவது அத்தியாயம்*1⃣5⃣
 
🐅 புருஷோத்தம யோகம்
 
அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.(15.10)
 
முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.(15.11)
 
சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.(15.12)
〰〰〰〰〰〰〰〰〰〰〰
 
🔏 இன்றைய திருக்குறள்
 
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
 
விளக்கம்
 
தன் கையிலிருந்த வேலைத் தாக்க வந்த போர் யானையைக் கொல்லுமாறு எறிந்துவிட்டு அடுத்து வந்த வேறொரு யானையைக் கொல்லுமாறு எறிந்துவிட்டு அடுத்து வந்த வேறொரு யானையைக் கொல்வதற்கு வேல் தேடித் திரும்பி வருகின்ற மறவன் தன் மார்பில் பாய்ந்த வேலைக்கண்டு பறித்து மகிழ்சியடைவான்
 
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 
💐 இன்றைய பொன்மொழி
 
பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள்.
 
-சுவாமி விவேகானந்தர்
▪▪▪▪▪▪▪▪▪▪▪
 
Good morning⁠⁠⁠⁠
 
 

Subject: Fwd: 2017 புத்தாண்டில் வெற்றிபெற 14 வழிகள்
 
2017 புத்தாண்டில் வெற்றிபெற  14 வழிகள்.
14 Ways for attaining Success in 2017.
 
இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்  கூச்சல்களுக்கு நடுவே, எது புத்தாண்டு என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்.
 
எப்போதெல்லாம் புதிய வளர்ச்சி வருகிறதோ, அப்போதெல்லாம் புத்தாண்டுதான்.
 
புத்தாண்டு வார்த்தைகளால் கொண்டாட வேண்டியதல்ல. வாழ்க்கையால் கொண்டாட வேண்டியது.
 
1.பத்து நிமிடங்கள் முன்னதாக:
 
காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.
 
2.பத்து நிமிடங்கள் மௌனமாக:
 
நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் தியானம் பழகுங்கள். அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள்.
 
3.முப்பது நிமிடங்கள்:
 
ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி.
 
4.உணவிலும் ஒழுங்கு:
 
வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள்.
 
5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:Day Task.
 
6.அடைசல்கள் அகற்றுங்கள்:
 
அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது
 
7.மனிதர்களை நெருங்குங்கள்:
 
இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.
 
8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:
 
வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். (WHAT NEXT?) இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.
 
9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:
 
ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். "இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்" என்று உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.
 
10.நன்றி அறிவிப்புத் தீர்மானமும் போடுங்கள்:
 
ஒவ்வொருநாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னால், (நீங்கள் பி.பி.. ஆசாமியாய் இருந்தால், ஒவ்வொரு பகலும் உறங்கப் போவதற்கு முன்னால்) நடந்து முடிந்த வேலைகளுக்காக, கடவுளுக்கும் துணை நின்றவர்களுக்கும் மனசுக்குள்ளேயே நன்றி சொல்லுங்கள்.
 
11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:
 
உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும்.
 
12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:
 
உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டைஅவதூறுஅனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.
 
13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:
 
இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லைமன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும்.
 
14.மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்:
 
மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய்மகிழ்ச்சியாய்வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.
 
நல்வாழ்த்துக்கள்...புத்தாண்டில் தொடங்கும் உங்கள் புதிய வாழ்க்கைக்கு!
அன்புடனும் நட்புடனும் !!!!
SIVA
----------------------------------------------------------------------
As received in my WhatsApp message.
SIVA-RECT 72
09842473192
 
 
*AC உபயோகிக்கலாமா?
நல்லதா? கெட்டதா?*
 
மனித உடலின் வெப்பநிலை 37 C நாம் குளிர்ச்சியான இடத்திற்கோ வெயிலான இடத்திற்கோ சென்றாலும் நம் உடல் வெப்பநிலை எப்போதும் 37 C தான் இருக்கும்.
 
ஏசியை நாம் இப்போது 18 முதல் 22C வைக்கிறோம். எனவே 20C வெப்பநிலையுள்ள ஏசி அறையில் நாம் வசித்தால் நம் உடல் வெப்பநிலையை 20C ல் இருந்து 37C க்கு உயர்த்த நம் உடலில் உள்ள உடல் வெப்பக் கட்டுப்பட்டு உறுப்பு உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், வெப்பத்தை உயர்த்த சர்க்கரை மற்றும் ஆக்சிஜனை அனுப்பும். இது உடலுக்குத் தேவையில்லாத வேலை. இப்படித் தேவையில்லாமல் உடல் வெப்பத்தை அதிகரித்தால் சர்க்கரை நோய், ஆஸ்துமா, வீசிங் மற்றும் BP ஆகிய நோய்கள் வரும்.
 
ஏசி என்பது நார்வே, சுவிட்சர்லாந்து, அமெரிக்க போன்ற குளிர்நாடுகளில் 22C பயன்படுத்துவார்கள். ஏனென்றால் அந்த நாடுகளின் வெப்பநிலை 25C யில் இருக்கும். 25C உள்ள நாடுகளில் +22C என்பது மிக வெப்பமான அளவு.
 
ஆனால் *இந்தியா போன்ற நாடுகளில்* இயற்கையாகவே சராசரியாக +30C இருப்பதால் இங்கே *ஏசி யைப் பயன்படுத்த அவசியமே கிடையாது*
 
ஏசி என்பது Air Cooler அல்ல, Air Conditioner.AC குளிர் நாடுகளில் நம் அறையை வெப்பப் படுத்துவதற்காகவும், சூடான நாடுகளில் அறையைக் குளிர்விப்பதற்காகவும் பயன்படுத்த வேண்டும்.
 
ஏசியில் எத்தனை டிகிரி வெப்பநிலை வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் மாறும்.
 
மேலும் ஏசி மூலம் கிடைக்கும் காற்றில் பிராணன் இருக்காது. ஆனால் இயற்கையான குளிர்காற்றில் பிராணன் இருக்கும்.
 
எனவே ஏசி பயன்படுத்தினால் பிராணன் கிடைக்காமலும் தேவையில்லாமல் வெப்பநிலையை மாற்றுவதாலும் நோய் வரும்.
 
எனவே தயவு செய்து ஓசியில் கிடைக்கிறது என்பதற்காக ஏசி பயன்படுத்தாதீர்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக !!
 
உடலின் வெப்ப சக்தியை ஒழுங்கு செய்வதற்கு மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி நமது உடலில் மற்றும் இரத்தத்தில் நெருப்பு சக்தியை ஒழுங்கு செய்வதன் மூலமாக அனைத்து நோய்களையும் குணப்படுத்த ஆரோக்கியமாக வாழமுடியும்.
 
 
Unity in Diversity  - an example at Srinagar / Kashmir.
 
* இது கதையல்ல .. "இந்தியா டுடே"யில் வந்த செய்தி ! *
 
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில்
 நடந்து சென்று கொண்டிருந்தார் அந்தப் பெண்
 
அருகிலேயே அவளது கணவர் ...
  தூக்க முடியாமல்  ஒரு பெரிய மூட்டையை   தூக்கி தோளில்   சுமந்தபடி ,  அந்தப் பெண்ணுக்கு துணையாக வந்து கொண்டிருந்தார் ..!
.
இவர்கள் இருவரைத்  தவிர அந்த சாலையில் ஒரு காக்கா கூட இல்லை .
 
காரணம் ... ஊரடங்கு உத்தரவு ..! 
.
கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன
போக்குவரத்து அடியோடு  நிறுத்தப்பட்டு விட்டது
வீட்டிலிருந்து யாராவது தெருவுக்கு வந்தால்
விரட்டி அடித்தார்கள் போலீஸ்காரர்கள் !
 
காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது இது ! ( 2016 ஜூன் )
 
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ,  ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டிருந்தார் . அதை தொடர்ந்து கலவரம் வெடித்தது
 
இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டார்கள் .
உடனே போடப்பட்டது ஊரடங்கு உத்தரவு ..! 
.
சந்தேகப்படும்படி யாராவது கண்ணில் பட்டால் உடனே சுட்டுத்  தள்ள உத்தரவு !
ஆனாலும் அந்த கணவனும் மனைவியும் அந்த ஆள் அரவமற்ற சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள் .
தடுத்தி நிறுத்தினார்கள் போலீஸ்காரர்கள்: ."எங்கே போகிறீர்கள் ?"
 
அந்தப் பெண் பதில் சொன்னார் : "ஜவகர் நகருக்கு..?"
 
"ஜவகர் நகருக்கா ? உங்கள் வீடு அங்கேயா இருக்கிறது ?"
 
"இல்லை ..இங்கே ஸ்ரீநகரில்தான் இருக்கிறோம்.. ஒரு முக்கியமான வேலையாக ஜவகர் நகருக்கு போகிறோம்"
 
"முக்கியமான வேலையா ? இந்த நெருக்கடியான நேரத்திலா ? அதுவும் நீங்கள் போகும் ஜவகர் நகர் கலவர பூமி .. இந்த நேரத்தில் அங்கு போக உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது ? அது இருக்கட்டும் ... இங்கிருந்து ஜவகர் நகர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?"
 
அந்த கணவன் சொன்னார் : "தெரியும்..பல கிலோ மீட்டர்கள் போக வேண்டும்.."
 
"பஸ் ஆட்டோ எதுவும் ஓடவில்லை . எப்படி நடந்து போவீர்கள் அவ்வளவு தூரம் ? அதுவும் இவ்வளவு பெரிய மூட்டையை தூக்கிக் கொண்டு .."
 
"போய் விடுவோம்.." –கணவனும் மனைவியும் சேர்ந்தே சொன்னார்கள் .
.
இவர்கள் பிடிவாதத்தை கண்டு கோபம் கொண்டார்  அந்த போலீஸ்காரர் :" சந்தேகப்படும்படி யாராவது சாலையில் போனால்  கண்டவுடன் சுடச் சொல்லி எங்களுக்கு உத்தரவு .. தெரியுமா ?"
 
" தெரியும் .."
 
"அது மட்டும் அல்ல ..இந்துக்களும் முஸ்லிம்களும் அங்கங்கே மோதிக் கொண்டிருக்கிறார்கள் . அந்த கலவரக்காரர்கள் கண்ணில் பட்டால் உங்கள் கதையையே முடித்து விடுவார்கள் ."
 
அந்தப் பெண் உறுதியாக சொன்னார் : "அதுவும் தெரியும் .. ஆனாலும் நாங்கள் போய் விடுவோம் .. போய்த்தான் ஆக வேண்டும்..மிக மிக முக்கியமான வேலை .."
.
அந்தப் பெண் நடக்க ஆரம்பித்தார் . கணவனும் மூட்டையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு மனைவியை பின்  தொடர்ந்தார் .
.
இடையில் பல இடங்களில் போலீஸ் அவர்களை மறித்தது . மீண்டும் மீண்டும் எச்சரித்தது .
.
அதையும் மீறி  அந்த கணவனும் மனைவியும் வெறிச்சோடிய அந்த  சாலைகளில்  ....
பகல் முழுவதும் நடந்தார்கள் ;
பல கிலோ மீட்டர் தூரத்தை கடந்தார்கள்
ஒரு வழியாக ஜவஹர் நகரை அடைந்தார்கள் .
.
எல்லா வீடுகளின் கதவுகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன
இந்த தம்பதிகள்   தேடி வந்தது பண்டிட்ஜி வீடு . அது அடுத்த தெருவில்தான் இருக்கிறது .
தெருவை   நெருங்கினார்கள் .
.
அதற்கு முன் ...ஒரு கடுமையான குரல் அவர்களை அதட்டியது : "நில்லுங்கள்"
 
திரும்பிப் பார்த்தார்கள் .
காவல்துறை அதிகாரியுடன் சேர்ந்து ஒரு பெரிய போலீஸ் பட்டாளமே அங்கு நின்றது .
 
"உங்களை கைது செய்யப் போகிறோம் ."
"எதற்காக ..?"
"உங்கள் தோளில் இருக்கும்  பெரிய மூட்டைக்குள் என்ன ஆயுதங்களை  வைத்திருக்கிறீர்கள் ? அதை கீழே இறக்குங்கள் ."
.
இறக்கினார்கள்
போலீஸ்காரர்கள் அதை எச்சரிக்கையுடன் திறந்து பார்த்தார்கள் . திகைத்துப்  போனார்கள் ..!
 
"எல்லாமே உணவுப் பொருட்கள் .. யாருக்கு இதை கொண்டு போகிறீர்கள்..?"
அந்தப் பெண் சொன்னார் : "இந்த ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட் வீட்டுக்கு ..! ஏன் என்பதையும் நீங்கள் கேட்காமலே சொல்லி விடுகிறேன்."
.
நடந்ததை அப்படியே போலீசுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண் .
 
அதிகாலையிலேயே ஒரு  போன் வந்தது   ஸ்ரீநகரில் இருக்கும் இந்தப் பெண்ணுக்கு !
 
பேசியவர் ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட்டின் மனைவி . இருவரும் நெருங்கிய தோழிகள் . ஒரே ஸ்கூலில்தான் டீச்சராக வேலை செய்கிறார்கள் .
அது சரி ... போனில் பண்டிட்டின் மனைவி என்னதான் சொன்னார்  ? 
.
இதோ ..அந்த பரிதாப கதை : "ஹலோ ..இங்கே  ஜவகர் நகரில் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கிறது . கடைகள் அடைக்கப்பட்டு பலநாட்களாகி விட்டன . வெளியில் செல்ல முடியவில்லை . வீட்டிலும் உணவுப் பொருட்கள் எதுவுமே இல்லை.. பாட்டியம்மா வேறு படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். தொலைபேசி வேறு வேலை செய்யவில்லை .. இப்போதுதான் இணைப்பு கிடைத்திருக்கிறது....
 
நான்கு  நாட்களாக  நாங்கள் யாரும் எதுவும் சாப்பிடவில்லை . உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறோம் ...இன்றும் பட்டினியாகத்தான் இருக்க வேண்டும் போல தெரிகிறது... நாளை நாங்கள் உயிரோடு இருப்பது கூட சந்தேகமாக ..."
.
பேசிக் கொண்டிருக்கும்போதே போன் கட் ஆகி விட்டது
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தொலை தொடர்பு இணைப்புகள் மீண்டும் துண்டிக்கப்பட்டு விட்டன. இனி அவர்களோடு பேசுவது இயலாத காரியம் .
.
இங்கே ஸ்ரீநகரில் இந்தப் பெண்ணும் , அவரது கணவரும் தவித்தார்கள்; துடித்தார்கள் . " நான்கு  நாட்களாக பட்டினியா ? எப்படி பண்டிட்டின் குடும்பத்துக்கு உதவுவது..?"
.
ஒரு நொடி கூட யோசித்து நேரத்தை கடத்தாமல் , உடனே ஜவகர் நகருக்கு புறப்பட்டு விட்டார்கள் கணவனும் மனைவியும்  . 
 
வீட்டில் இருந்த கோதுமை , அரிசி , பருப்பு , காய்கறிகள் , மசாலா பொருட்கள் ... எல்லாவற்றையும் பெரிய மூட்டையாக கட்டி தன் கணவரின் தலையில் வைத்தார் அந்தப் பெண் . பஸ் , ஆட்டோ எதுவும் இல்லாததால் , பல கிலோ மீட்டர்கள் நடந்தே வந்து ....
.
"இப்போது ஜவகர் நகருக்கு வந்திருக்கிறோம்" இப்படி போலீஸ்காரர்களிடம் பொறுமையாக சொல்லி முடித்தார்  அந்தப் பெண்.
 
கலங்கி விட்டார் அந்த காவல்துறை அதிகாரி : " ஒரு நட்புக்காக உயிரை பணயம் வைத்து பல கிலோமீட்டர்கள் நடந்தே வந்திருக்கிறீர்கள் .. அதுவும் இந்த மூட்டையை சுமந்து கொண்டு ! பாராட்டுகிறேன் அம்மா ... சரி ...உங்கள் குடும்ப நண்பர் பண்டிட் வீடு எங்கே இருக்கிறது ?"
 
"அடுத்த தெருவில்தான் .. !"
 
"வாருங்கள் .. நானே பத்திரமாக வீடு வரை வருகிறேன்..."
.
காவல்துறை அதிகாரியே சென்று பண்டிட் வீட்டு கதவை தட்டினார் .
கதவு மெல்ல திறந்தது ; உள்ளே இருந்து வந்த பண்டிட்டும் , அவரது மனைவியும் , இந்த தம்பதிகளை பார்த்தவுடன் ஆச்சரியத்தில்  ,
" அட கடவுளே ..இது என்ன ? எப்படி இவ்வளவு தூரம் வந்தீர்கள் ? முதலில் உள்ளே வாருங்கள் .."
.
 தோழிகள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள் ; கண்ணீர் வடித்தார்கள் .
 
வாசலில் நின்ற காவல்துறை அதிகாரி கூட தன் கண்களை துடைத்துக் கொண்டார் : "சரியம்மா ..முதலில் சாப்பாடு தயார் செய்து சாப்பிடுங்கள் . நான் வருகிறேன் ."
 
 "நன்றி சார்.."
 
"பை தி பை .. நான் உங்கள் பெயரை தெரிந்து கொள்ளலாமா மேடம் ..?"
.
அந்த ஸ்ரீநகர் பெண் சிரித்தபடி சொன்னார் : "சுபைதா பேகம்.."
.
ஆம் .. இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த நேரத்தில்  ... 
பசியால் துடித்துக் கொண்டிருந்த  பண்டிட் என்ற ஒரு இந்து மனிதரின் குடும்பத்துக்கு ,  
பல  கிலோமீட்டர் தூரம்  நடந்து  கடந்து ,
 தேடிச் சென்று உணவு கொடுத்தது 
சுபைதா பேகம் என்ற ஒரு முஸ்லிம் குடும்பம்தான் ..!
.
இது கதையல்ல .. "இந்தியா டுடே"யில் வந்த செய்தி !
.
இப்படிப்பட்ட மனித நேயம் , மத நல்லிணக்கம் கொண்ட மனிதர்கள் இருக்கும்வரை ...
அந்த ஆண்டவனே வந்தால் கூட இந்தியாவில் மத பிரிவினையை உருவாக்க முடியாது !
.
வாழ்த்துக்கள் 
எங்கள் இனிய சகோதரி 
சுபைதா பேகம் அவர்களே  .. !
 
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___