Friday, 6 May 2016

[www.keralites.net] : SRIRENGAM CHITHIRAI CAR FESTIVAL - ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி சித்திரைத் தேர் 5,5,2016

 





SRIRENGAM  CHITHIRAI CAR FESTIVAL –
 
ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி
 
சித்திரைத் தேர் 5,5,2016
 
 
car9a.jpg
 
car9.jpg
 
car8.jpg
 
car2.jpg
 
car1.jpg
 
car7.jpg
 
car3.jpgcar4.jpgcar5.jpg
 
 
 
Courtesy:   Ramalingam, Yathiri Nivas, Srirengam,
 
Trichy Prasannam
9941505431
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] Pradosham Special-Where is the Siva Temple? - இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு? [1 Attachment]

 



 






Pradosham Special-Where is the Siva Temple? - இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?

("காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!")

தொகுப்பு-சாருகேசி
நன்றி-பால ஹநுமான்

பெரியவாளின் மகிமையையும் ஞானத்தையும் விளக்கும்படியாக இன்னொரு சம்பவம்!

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த மகா பெரியவாளின் தீட்சண்யத்தை- தீர்க்க தரிசனத்தை விளக்கும் அந்த நிகழ்வை நம்மோடு பகிர்ந்து கொண்டவர் வைத்தியநாதன். சங்கர பக்த ஜன சபாவின் செயலாளரான இவர், தமது இளவயது முதற் கொண்டே மகா பெரியவாளின் அணுக்கத்தில் இருந்த அடியவர்.

இவரின் சிலிர்ப்பான அனுபவத்தை ஒரு விறுவிறுப்பான கதையாகவே இங்கே காண்போம்…

அது, மாசி மாதத்தின் வைகறைப் பொழுது. மார்கழியில் துவங்கிய குளிர் இன்னும் விட்டபாடில்லை. முகம் தெரியாத இருட்டை, தீவட்டி வெளிச்சத்துடன் ஊடறுத்தபடி, வெண்ணியாற்றின் வடகரை வழியே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பல்லக்கு ஊர்வலம்.

முதலில் பல்லக்கு, அதைப் பின்தொடர்ந்து அடியார் கூட்டம், அவர்களுக்கும் பின்னால் யானை, குதிரை, ஒட்டகப் பரிவாரங்கள் என நகர்ந்த அந்த ஊர்வலம்… மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி தாண்டி, நத்தம் என்ற இடத்தை அடைந்தபோது, பல்லக்கின் உள்ளே இருந்து, தண்டத்தால் ஒலியெழுப்பும் சத்தம்! சட்டென்று நின்றது ஊர்வலம்.

அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அங்கிருந்து இடமும் வலமுமாக இரண்டு பாதைகள் பிரிந்தன.

மெயின் ரோட்டில் இருந்து இடதுபுறமாகத் திரும்பி பயணிப்பதுதான் திட்டம். ஆனால், பல்லக்கின் உள்ளே இருந்து மீண்டும் தண்டத்தால் தட்டும் சத்தம் கேட்டது. அந்த சமிக்ஞை மூலம், ஊர்வலம் வலப்புறமாகத் திரும்ப உத்தரவாகி விட்டதைப் புரிந்து கொண்டார் மாலி என்ற அன்பர். ஊர்வலம் வலதுபுறமாகத் திருப்பப்பட்டது.

"இது, மண்மங்கலம் போற பாதை ஆச்சே…" – அடியார்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பினார்.

"இப்படிப் போகணும்னு உத்தரவாயிடுச்சுன்னா அதன்படி போயிடணும். நிச்சயமா இதுக்கு ஏதாச்சும் காரண-காரியம் இருக்கும்" – அடியவர் மாலி சொல்ல, அதன் பிறகு எவரிடம் இருந்தும் வேறு கேள்வி எழவில்லை.

மண்மங்கலம் கிராமம் இன்னும் முழுமையாக விழித்துக் கொள்ளவில்லை. அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அம்மாள், திண்ணை மாடத்தில் அகல் விளக்கேற்றி வைத்தார். அப்படியே இன்னொரு விளக்கை பெருமாள் கோயில் வாசற்படியில் ஏற்றி வைத்து விட்டு வந்து, தனது வீட்டு வாசலில் நீர் தெளித்துப் பெருக்க ஆரம்பித்தார். அதே நேரம்… தூரத்தில் ஏதோ பெரிய ஊர்வலம் வருகிற மாதிரி சத்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். குதிரையும் யானையுமாக பல்லக்கு ஊர்வலம் ஊருக்குள் வந்து கொண்டிருப்பதைக் கண்டு அவர் கண்கள் வியப்பால் விரிந்தன.

மிகச் சரியாக அவரது வீட்டு வாசலை பல்லக்கு நெருங்கியதும், மீண்டும் உள்ளே தண்டத்தின் சத்தம். பல்லக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. எத்தனையோ காப்பியங்களிலும் கதைகளிலும் சொல்லி இருக்கிறார்களே, ஆதவனைக் கண்டு தாமரை மலர்ந்ததாக… அப்படியொரு அற்புதத்தை அன்று நிஜமாகவே மண்மங்கலம் கிராமம் சந்தித்தது.

உடம்பாலும் வாக்காலும், மனத்தாலும் செயலாலும் தன்னை முழுவதுமாகப் பரம்பொருளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட அந்தத் தெய்வத் தாமரை, மெள்ள பல்லக்கின் திரையை விலக்கித் தன் திருமுகம் காட்ட… அதன்பின்னரே, இன்னும் தாமதிக்கக் கூடாது என்பதுபோல் சட்டென்று மேகத் திரையை விலக்கி, ஆதவனும் தன் ஒளிக்கிரணங்களை அந்தக் கிராமத்தின் மீது வீசி, தெய்வத் தாமரையின் திருவடிகளைத் தொட்டு வணங்கினான்.

ஆமாம்… அந்தக் கிராமம் செய்த புண்ணியம்… மகா பெரியவா என்ற தெய்வக் கமலம், தமது திருவடிகளை அந்த மண்ணில் பதித்துத் திருவருள் புரிந்தது.

வாசல் தெளித்துகொண்டிருந்த பெண்மணி, இப்படியொரு தெய்வீக தரிசனத்தைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கண நேரம் ஸ்தம்பித்து நின்றவள், பிறகு சுதாரித்து உள்ளே ஓடி, கணவரிடம் விஷயத்தைச் சொன்னாள். அவரும் எழுந்து ஓடிச் சென்று, நான்கு சொம்பு தண்ணீரைத் தலைக்கு ஊற்றி அவசர அவசரமாகக் குளித்து முடித்து, விபூதி பூசிக்கொண்டு வருவதற்குள், நிறைகுடமும் பூரண ஆரத்தியும் தயார் செய்து விட்டிருந்தாள் அந்த மாதரசி.

மகா பெரியவாளுக்கு ஆரத்தி எடுத்து, பாத பூஜை செய்து, அவரை வணங்கி வரவேற்றனர் அந்தத் தம்பதி. சில நிமிடங்களில்… வீட்டின் திண்ணையை அலம்பிச் சுத்தம் பண்ணி, கோலம் இட்டு வைக்க, அங்கே பெரியவா அமர்ந்துகொண்டார்.

இதற்குள் குதிரை, யானை பரிவாரங்களின் சத்தம் கேட்டு ஒட்டு மொத்த ஊரும் விழித்துக் கொண்டு அந்த வீட்டின் முன் திரண்டு விட்டது. பழத் தட்டுக்களுடனும் மலர் மாலைகளுடனும் சாரை சாரையாக வந்து, மகா பெரியவாளை வணங்கினார்கள். யானை, ஒட்டகங்கள் எல்லாம் ஆற்றங்கரைப் பக்கம் ஓட்டிச் செல்லப்பட, மகா பெரியவாளுடன் வந்த அன்பர்கள் ஊருக்குள் தங்க வசதி செய்து தரப்பட்டது.

'பெரியவா எப்படி இந்தப் பக்கம் வர நேர்ந்தது?' என்று எல்லோரும் விசாரிக்கத் தொடங்கினார்கள். தகவல் எதுவும் சொல்லாமல் ஸ்ரீமடத்தில் இருந்து இப்படி திடுதிப்பென்று வரமாட்டார்களே என்று அவர்களுக்கு ஓர் ஐயம்!

"நெடுங்கரைப் பக்கம் திரும்பறதாகத்தான் திட்டம். ஆனா, பெரியவா இந்தப் பக்கம் வரச் சொல்லி உத்தரவு பண்ணினார். வந்துட்டோம். ஏதோ முக்கியமான காரணம் இருக்கும்!" என்று அவர்களுக்குப் பதில் சொன்னார் வைத்தியநாதன்.

மகா பெரியவா இரண்டு நாட்களாக மௌனம் அனுஷ்டிக்கிறார்; அவர் எப்போ வேணும்னாலும் மௌனத்தைக் கலைக்கலாம். ஊர்க்காரர்களுக்கு ஆதங்கம் என்னவென்றால்… மகாபெரியவா வருவது முன்னரே தெரிந்திருந்தால், ஊர் எல்லைக்கே சென்று அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றிருக்கலாமே என்பதுதான். ஆனால், தெய்வ சித்தம் என்ன என்று அவருக்குத்தானே தெரியும்!

ஸ்நானம், பூஜை எல்லாம் முடிந்து எல்லோருக்கும் ஆகாரம் ஆயிற்று. மகா பெரியவா பசும்பாலும் உலர் திராட்சையும் மட்டும் எடுத்துக் கொண்டார். மற்றவர்களுக்கு ஒவ்வொருத்தர் வீட்டிலும் இலை போட்டுப் பாயசம், அப்பளம் என்று உணவு பரிமாறினார்கள். அதற்குள் செய்தியை அறிந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஜனங்கள் வந்து சேர்ந்தார்கள். மாசிமாதம் அறுவடை முடிந்த நேரம் என்பதால் மிராசுதாரர்கள், குடியானவர்கள், தொழிலாளர்கள் என்று எல்லோரும் வந்துவிட்டார்கள். தாமரைப் பூ, இளநீர், வாழைத்தார் என்று ஜனங்கள் தாங்கள் கொண்டு வந்ததை பெரியவா முன் சமர்ப்பித்து வணங்கினார்கள். வயதான ஓர் அம்மாள் தினக்கூலி நெல்லை மடியில் கட்டி எடுத்து வந்திருந்தாள். அதை அப்படியே பெரியவா முன்னே கொட்டி, அவரை நமஸ்காரம் பண்ணினாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கணுமே… அப்படியொரு சந்தோஷம்! காணிக்கைகளால் அந்தத் திண்ணையே நிரம்பிவழிந்தது.

மகா பெரியவாளிடம் முறையிடுவதற்கு அந்த ஜனங்களுக்கெல்லாம் நிறைய விஷயங்கள் இருந்தன. கல்யாணம் ஆகலை, வீடு கட்ட முடியலை, பாகப்பிரிவினை சிக்கல்… இப்படி ஒவ்வொருத்தரும் தங்களின் குறையை அவர் முன் சமர்ப்பித்தார்கள். 'வடக்கே சமயச் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை. ரத்தம் ஆறா ஓடுறது. பெரியவாதான் அமைதி உண்டாக்கி வைக்கணும்.' – இப்படியும் நிறையக் கோரிக்கைகள்.

மகா பெரியவா எதுவும் பேசவில்லை. எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கை தூக்கி, வந்தவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். சிலருக்கு எலுமிச்சை, துளசி எனப் பிரசாதமும் கிடைத்தது. நேரம் நகர்ந்து கொண்டு இருந்தது. மகா பெரியவாளின் மௌனம் கலையவில்லை. திடீரென மாலியை அருகில் அழைத்து, சைகையால் பேசினார். கைகளால் லிங்கம் போன்றும், கோயில் கோபுரம் போன்றும் அபிநயித்துக் காட்டி, 'எங்கே இருக்கிறது?' என்பது போல் சைகையால் கேட்டார்.

அதை மாலி புரிந்துகொண்டார். கூட்டத்தைப் பார்த்து, "இந்த ஊரில் சிவன் கோயில் எங்கே இருக்கு?" என்று கேட்டார்.

அன்பர் மாலியின் இந்தக் கேள்விக்கு, கூட்டத்தில் எவரிடம் இருந்தும் பதில் இல்லை.'இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?"

அவர்களில் பழுத்த பழமான ஒரு முதியவர் மட்டும், 'இங்கே ஒரு பெருமாள் கோயில் இருக்கு. அது போக, மாரியம்மன் கோயிலும் அய்யனார் கோயிலும் உண்டு. ஊர் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி இங்கே சிவன் கோயில் எதுவும் இருக்கிறதா தெரியலையே?" என்றார். 90 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவருக்கே சிவாலயம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லையே!

மகா பெரியவா மறுபடியும் ஏதோ சைகையால் கேட்டார்… 'மேல் கோடியில பெருமாள் கோயில் இருந்தா, கீழ்க் கோடியில சிவன் கோயில் இருந்திருக்கணுமே?"

நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அங்கே சிவாலயம் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததா என்றால், அது குறித்தும் அந்த ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.

அந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய தம்பதி அங்கே வந்தனர். தன்னை லத்தீஃப் பாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இஸ்லாமிய அன்பர், தன் மனைவியின் பெயர் மெகருன்னிசா என்றும் தெரிவித்தார். தாம் கொண்டு வந்திருந்த இரண்டு சீப்பு பேயன் பழங்களையும், ரோஜாப்பூக்களையும் மகாபெரியவா முன் சமர்ப்பித்தார்.

அவர்களை தலை முதல் பாதம் வரை ஏற இறங்கப் பார்த்தது நடமாடும் தெய்வம். கருணை மிகுந்த அந்தப் பார்வையில் மெய் மறந்து போனார்கள் அந்த இஸ்லாமிய தம்பதியர். ஒருவாறு சுதாரித்துக் கொண்டு, சிலிர்ப்பான அந்தத் தருணத்தில் இருந்து மீண்டு, லத்தீஃப் பாய் பேசத் தொடங்கினார். அற்புதமான ஒரு தகவலை விவரித்தது அவரது பேச்சு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அங்கே சிவன் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. கால மாற்றத்தில் கோயில் சிதிலமாகி, மண்ணுக்குள் புதையுண்டு போனது. கோயில் இருந்த இடமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலப் பல கைகள் மாறி, இப்போது லத்தீஃப் பாயின் வசம் இருக்கிறது.

'எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களைக் கவனிச்சுக்கும் போது, கூடவே கோயில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக. ஒரு மரக்கால்கூட குறையாம அளந்து கொடுப்பாக. 'சிவன் சொத்து குலம் நாசம்'னு அவுகளுக்கு இருந்த அதே நேர்மையையும், நல்ல எண்ணத்தையும், புத்தியையும் எனக்கும் கொடுத்திருக்கான் இறைவன். ஆனாலும் என்ன… எனக்குப் பொறந்த ஒரு பெண் பிள்ளையும் மன வளர்ச்சி இல்லாம இருந்து, பத்து வருஷத்துக்கு முன்னாடி இறந்தும் போச்சு.

சரி… நாம அறிந்தோ அறியாமலோ பாவம் செஞ்சிருக்கோம் போல; அதனால்தான் அல்லா நமக்கு இப்படியொரு தண்டனையைக் கொடுத்திருக்காருன்னு சமாதானம் பண்ணிக்கிட்டோம். காலமும் அப்படியும் இப்படியுமா ஓடிப் போயிடுச்சு. நேத்திக்கு கொல்லைப்பக்கம் மண்ல வேலை செஞ்சுட்டிருந்தேன். அப்ப… மண்வெட்டி ஏதோ கல்லுல பட்ட மாதிரி 'ணங்'குனு ஓசை கேட்டுச்சு. கவனமா மண்ணை விலக்கிப் பார்த்தால்… பெரிய சிவலிங்கம்! ராத்திரி முழுக்க உறக்கம் வரல்லே சாமி! 'அல்லா… இப்ப என்ன பண்றது!'ன்னு புரியாம, விசனத்தோட உட்கார்ந்திட்டிருந்தோம். விடிஞ்சதும் தான், சாமி இங்கே வந்திருக்கிறதா பக்கத்துல இருந்த ஜனங்க பேசிக்கிட்டாங்க. உடனே இங்கே ஓடி வந்துட்டோம். இதுக்குமேல நான் என்ன செய்யணும்னு சாமி தான் வழி காட்டணும்.

மனசார என் நிலத்தை எழுதித் தர்றேன். இதுக்காக எனக்கு பணம், காசு எதுவும் வேணாம். முன்னே இருந்த மாதிரியே அங்கே சிவன் கோயில் கட்டிக்கலாம். ஊர் ஜனங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா, அதனால ஊர் ஜனங்க சந்தோஷப்படுவாங்கன்னா, அதுவே அல்லாவையும் சந்தோஷப்படுத்தும்!" என்று நெகிழ்ச்சியோடு, கண்ணீர் மல்கப் பேசி முடித்தவர், அப்படியே இன்னொரு காரியத்தையும் செய்தார்.

"இந்தாங்க, கோயில் கட்ட எங்களோட காணிக்கையா நூத்தியொரு ரூபாய். முதல் வரவா இதை வாங்கிக்குங்க!' என்று வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அங்கிருந்த அனைவருக்கும் உடம்பு சிலிர்த்துப் போட்டது.
அதுவரை மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த மகா பெரியவா, புன்னகையோடு சைகையால் அந்த இஸ்லாமிய அன்பரை ஏதோ கேட்டார். அது அவருக்குப் புரியாமல் போகவே, ஒரு சிலேட்டும் பலப்பமும் கொண்டு வந்து மகாபெரியவாளிடம் தந்தார்கள். அவர் சிலேட்டில் எழுதிக் காண்பித்தார்… 'மார்க்கக் கடமையை முடித்து விட்டீர்களா?' என்று.

படித்துப் பார்த்த இஸ்லாமிய அன்பர், "இன்னும் இல்லே சாமி! அதுக்கான பண வசதியை அல்லா இன்னும் எங்களுக்குக் கொடுக்கலை. எத்தனையோ வருஷம் முயற்சி பண்ணியும் மக்கா- மதீனா போகும் பாக்கியம் இன்னும் வாய்க்கலை" என்றார் கண்ணீர் மல்க.

உடனே பெரியவா, வைத்தியநாதன் நின்றிருந்த பக்கமாகத் திரும்பினார். "இத்தனை உசத்தியான மனுஷர் நிலத்தைத் தரேன்கிறார். அவாளுக்கு நாம எந்த ஒத்தாசையும் செய்ய வேண்டாமா?" என சைகையால் கேட்டார். தொடர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சைகையாலேயே உத்தரவு பிறப்பித்தார். பெரியவாளின் விருப்பத்தை அப்படியே கூட்டத்தாரிடம் எடுத்துச் சொன்னார் வைத்தியநாதன்.

அவ்வளவு தான்… ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து ஒரே குரலில் ஒப்புக் கொண்டது… "அவங்க புனித யாத்திரை போய்வர ஆகற செலவு மொத்தமும் நம்மளோடது!"

அதைக் கேட்டு இஸ்லாமிய தம்பதிக்கு மனம்கொள்ளா மகிழ்ச்சி! அவர்களுக்கு மட்டுமில்லாமல், அங்கிருந்த எல்லோருக்குமாக, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தது மானுட தெய்வம்.

பிறகு, மெள்ள எழுந்த மகாபெரியவா, தூணில் சாத்தியிருந்த தண்டத்தை கையில் எடுத்துக் கொண்டார். அப்படியே நடந்து வந்து பல்லக்கில் ஏறி உட்கார்ந்து கொண்டார். மீண்டும் ஊர்க்காரர்களைப் பார்த்து ஒரு புன்னகை; கரம் உயர்த்தி ஆசீர்வாதம்!

பரிவாரங்கள் பின்தொடர, பல்லக்குப் புறப்பட்டது.

ஊர்வலத்துடன் வந்த அன்பர் மகாலிங்கம் சொன்னார்… 'எனக்கு இப்பத்தான் தெரியுது… மகாபெரியவா ஏன் திடீர்னு இந்த ஊருக்கு வர முடிவு பண்ணினார்னு!"

காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகா பெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!

BY SAI SRINIVASAN.

Where is the Siva Temple Here?

There is no effect without a cause! There is a reason behind each act of Maha Periyava

Collected & Presented by: Charukesi
Acknowledgement: Bala Hanuman

One more incident to describe Maha Periyava 's Significance and Wisdom!

Vaidyanathan shares with us an incident that reveals the 'Foresightedness' of Maha Periyava who has been the Living God. He is the Secretary for Sankara Bhakta Jana Sabha. Right from his childhood, he was under the radar of Maha Periyava .

Let us view his experience as an interesting story.

That was a dawn in the month of March. The cool breeze which started in January was still flowing. It was pitch dark and a palanquin procession with the torch lamp was proceeding enroute the shore of a river. First, it was the palanquin followed by the followers' crowd, followed by elephants, horse, camel families. This was the sequence…. This group crossed Maayanur, Harischandrapuram, Thittacheri and when it reached a place called Naththam, there was a sound emanating from the strike of Dhandam (the stick held by Maha Periyava ) against the palanquin. The procession came to a grind halt.

There was a Ganesha temple. And from there were two ways leading to the left and right side. As per the plan, it was decided to take the left side from the main road and then continue the travel. But again there was a sound (Dhandam knocking the palanquin doors) from inside of the palanquin. So Mali, a devotee could understand that it was an indication for them to take a right turn instead. Accordingly, the procession was heading towards right side from the main road.

One of the devotees skeptically enquired, "This seems to be the route towards Manmangalam".

When we get an indication and order that we need to follow a particular path, we should necessarily take that path. It will for sure have a Cause Effect. As Mali was saying so, no question was raised from anybody else.

Manmangalam village has not yet awaken. A lady from that house came out, lit an earthern lamp in the threshold of the house. Immediately after that she went to the nearby Lord Venkateshwara (Perumal) temple and lit one more lamp at the entrance of the sanctum sanctorum and came back to her home and started sweeping and cleaning the house entrance with water. At the same time, she heard some sound from a marching procession and was surprised after seeing. She was taken aback on seeing such a huge procession with elephants and horses in that village.

Exactly when the procession was near the lady's house, there was a sound from inside the palanquin. The Palanquin was made to halt there. It has been declared in so many epics and stories that a flower booms on seeing the sun. Such a anugraham was experienced really that day by the Manmangalam village.

The Divine Lotus who has surrendered to the Supreme Lord, by way of body, words, deeds and thoughts, slowly opened the curtain of the palanquin to show His face. Only after that, the Sun God, with the idea of not delaying further, unveiled the curtain of clouds, showered his rays on the entire village and touched and worshipped the lotus feet of the Divine Lotus.

Yes, the village had been well deserving and virtuous to have received such a Grace. The Divine Lotus (Maha Periyava ) has touched the village and blessed it by affirming the feet on the village.

The lady who was cleaning her house entrance with water, never expected such a Divine Darshan. For a moment she was stand still, but in a few minutes she came back to normal, immediately went inside her house and informed her husband. On hearing this, he at once took bath quickly, applied sacred ash and at the same time the lady has kept a pot filled with water and Arathi (camphor to circumambulate Maha Periyava ) ready.

The couple washed the holy feet with the pot water, took Arathi, prostrated and welcomed Maha Periyava . In a few minutes, the house entrance balcony was cleaned and rangoli was done. Maha Periyava sat down there.

In the meantime, the sounds of elephant and horse families made the entire village awake and all the people of the village surrounded the lady's house. There was huge gathering around the house with plates full of fresh fruits, flower garlands to worship Maha Periyava . The camels and elephants were taken to the river shore and the devotees of Maha Periyava were given the necessary hospitality for the stay and food.

"How did Periyava happen to come to this place"? the question was being asked by almost everyone. They had a doubt that without prior information, all of a sudden He will not usually plan to come from Sri Madam to this village.

"The plan was actually go towards Nedungarai. But Periyava ordered us to come to this place. We came as per the order. There must be an important reason for this". So replied Vaidyanathan.

Maha Periyava was in silence for the past two days. Anytime he might come out of that mode. The village people felt that had they known in advance that Periyava was visiting their village, they would have welcomed Periyava from the borders of the village with all due respects with Poorna Kumbham. But only He knew what the Divine Will was.

Everyone had bath, performed puja and the lunch was also done. Maha Periyava partook only dry grapes and milk. For others, they were served feast from the villagers' homes with Banana leaf and they had Porridge, papad etc. The news spread so fast that even the neighbouring villagers started coming to that village to have Darshan of Maha Periyava . The mid-March marked the completion of all the harvests and so the village heads and the main business people could make it for the Darshan. The village people offered whatever they brought for Maha Periyava , like lotus flowers, tender coconuts, banana stem etc. and sought His blessings. An old day brought some paddy that was earned as her daily wage. She put the entire paddy stuff in front of Maha Periyava and offered her namaskarams (prostration) to Him. One should see her face that time…such an ecstasy and happiness! The whole balcony was filled with gifts and offerings.

There were lot of things the village people had that they wanted to discuss with Maha Periyava. Cases like delay in marriage, obstacles in construction house, problems in property division and share. This way everyone had a problem and each of them put forth his problem to Maha Periyava. There was no sign of improvement in the caste system in the North. Blood was flooding like a river. Only Maha Periyava should bring in peace. So many problems like these were discussed.

Maha Periyava didn't speak, but was listening to all these silently. He lifted his Hands and blessed everyone. He gave away some Basil leaves, lemons to some of them. Time was ticking. Periyava's silence was still not broken. Suddenly He called up Mali and conveyed something through his body language. He was forming some shapes with His hands like Lingam and Temple tower and looked like He was asking for where do they find them in this village.

Mali could interpret that. Mali asked the villagers, "Where is the Shiva temple in this village?" there was no response from anyone in that village for his question.

Among the villagers, an old man said, "There is a Vishnu temple here. Apart from that, there is a Devi temple and Ayyanar (Village God for Protection) temple. There is a Ganesha temple in the village border. That's all. We are not sure if Shiva temple is here." When an old man who was 90 years didn't know about the details of Shiva temple, nobody else in the village will happen to know!

Maha Periyava again asked something through his body language. If Vishnu temple is there is the upper part of the village, there should have been definitely a Shiva temple in the lower part of the village. It would have been there for sure. But at present there is no Shiva temple. The villagers were not sure if that existed in the past. Everyone was silent.

During this conversation, there came an Islamic couple. The man introduced himself as Latif Bai and his wife as Meharunnisa. They offered 2 bunches of banana clusters and rose flowers that they brought along with them, to Maha Periyava.

The Moving God saw the couple from head to toe. The Islamic couple were lost in the divine feeling that was caused by the compassionate looks of those Divine Eyes. But then, the Islamic man came back to his normal state from that blissful state and started conversing. His conversation revealed a wonderful information.

Some centuries back there was a Shiva temple in that village. As years passed by, the temple got deteriorated and got buried inside the land. The land was occupied by many of them and now finally it is in the possession of Latif Bai.

When my dad was taking care of Durgah lands during his time, he also took lease of some temple lands and started cultivation. He is very honest that he doesn't give any less even a brass glass of the cultivation. He conducted himself in such a manner that he believed that Shiva's property will destroy one's lineage. I am happy that God Has given me the same honesty, belief and conduct. But what to do? The only daughter born to us was mentally challenged and she passed away 10 years back.

I thought that knowingly or unknowingly we have committed some sin and we consoled ourselves thinking that is the reason Allah Has punished us this way. Time passed so quickly. Yesterday I was doing some work in the backyard in the sand. I heard a strange noise when I hit the sand with the ploughing device. When I carefully took the sand aside and looked inside, there was a huge Shiva Linga. I didn't get sleep, the whole of that night. We were worried and praying Allah as to what to do with that. When it dawned, the people around were speaking about your visit to this village. Immediately we came here. Only Maha Periyava Has to guide us on what to do beyond this.

"Whole heartedly I will give off my land. I don't need any money in return. We can construct Shiva temple as it was before. If that helps the villagers and if they feel happy for that, it will make Allah happy!" Saying this the old man was speaking emotionally with tears in his eyes and he also did one more thing.

"Please accept our share of Rs.101/- for constructing the temple. Kindly accept this as a first resource". So saying the old man gave this money in a plate along with betel leaves and nuts. Everyone around was taken aback and dumb found.

So far Maha Periyava had been listening all these silently and smilingly He asked something to the old man through his actions. Since the old man could not understand that, he brought a slate and a chalk piece and handed over to Maha Periyava. He wrote in the slate asking the old man if he has finished his Mecca pilgrimage.

After reading that the Islamic old man replied that he has still not done that and he further added that Allah Has still not given them the financial aid to undertake the pilgrimage. He also told with tear filled eyes that even after planning for so many years, they have still not got the fortune of visiting Mecca Madina.

Immediately Maha Periyava turned to the side of Vaidyanathan and indicated in an enquiring mode, "Such an elevated person has agreed to offer the land. Shouldn't we help them with something? He also conveyed what needs to be done further. Vaidyanathan conveyed Maha Periyava's intention and desire to the villagers around there.

On hearing that, the entire village unanimously agreed to what had been proposed. They said, "we will bear the entire expenses of their pilgrimage". The couple's joy knew no bounds. Maha Periyava then blessed the Islamic couple and also all the villagers around there.

Thereafter, Maha Periyava slowly got up and took the Dhandam that was leaning against a wall. He got into the palanquin and sat inside that. Again smiled at the villagers and blessed them.

The procession family followed the palanquin and proceeded further. Mahalingam who was part of the procession, said, "I understand only now, why Maha Periyava decided to stop into this village." Without reason, there is no effect. Maha Periyava 's every action has a strong reason.


Circulated By:
K.Raman.


__._,_.___
View attachments on the web

Posted by: Raman K <kraman_4@yahoo.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 1 photo(s) from this topic.
naanthansivan.jpg

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] [Raman's] வில்வம்

 





வில்வம் -ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்
அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் பற்றிப் பார்ப்போம்

ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம்

சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு) அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.

வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன

குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்

ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு ( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக) முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்

வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு

மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்

வில்வ வழிபாடும் பயன்களும்

சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்

வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.
வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது

மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்

எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்

வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன

வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்

அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது

சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் ( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்

அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டான்

ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்

வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்

ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்

வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது.



நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.

மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை) கடாட்சத்தைப் பெறமுடியும்

வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது

ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்

வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்

மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே

பொருள் விளக்கம்

போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்

ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்

இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை "சிவமூலிகைகளின் சிகரம்" எனவும் அழைப்பர்.


வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.


--
Posted By Blogger to Raman's at 5/06/2016 08:43:00 PM


__._,_.___

Posted by: Raman K <kraman_4@yahoo.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___