Sunday 26 February 2017

[www.keralites.net] : 27-02-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?...!!- OMG !!! [2 Attachments]

 





 
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
27-02-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
tea cup with rose.gif
 
27217t.JPG
 
வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா?- OMG !!!
Are there so much info 
about Warm Water ? !-OMG !!!
 
12 benefits of drinking warm water.
 
1#நெஞ்சு_எரிச்சல்_போகணுமா?
 
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட்
அல்லது பூரி சாப்பிட்ட  பிறகு நெஞ்சு 
கரித்துக் கொண்டிருக்கிறதா
உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை….! 
மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் 
நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
 
2.#சதை_குறையணுமா?
 
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி  சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்...!
 
3.#காலையில்_சரியாக_மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?
 
எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே!
 இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும்.
 (நிறையப் பேர், "அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்" என்று புலம்புவது கேட்கிறது!)...!
 
4.#உடம்பு_வலிக்கிறதா?
 
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா?
 உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள்,
 பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள்
இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு 
மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு
நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு
இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்...!
 
5.#கால்_பாதங்கள்_வலிக்கிறதா?
 
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால்
அதற்கும் நமது வெந்நீர்தான் 
ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் 
உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் 
பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு 
இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் 
கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்...!
 
6.#மூக்கு_அடைப்பா?
 
மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்!
 வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி!
 வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து
துணி துவைக்கும் பெண்கள்
வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள்.
 இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய்
உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்...!
 
7.#வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில்  அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர்
 அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா,  ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர்,
 உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் 
கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்...!
 
8.#திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்...!
 
9.#ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு
 
அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் 
வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு 
நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும்
இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய்
எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் 
கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்...!
 
10.#தரையை_துடைக்கும் போது
 
அதுபோலவே தரை துடைக்கும் போது
குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் 
இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் 
உபயோகப்படுத்தி துடையுங்கள்.
 கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்...!
 
11.#திடீரென்று_கடுமையான_தலை_வலியா?
 
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு 
வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு
எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால்
உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும்
அல்லது சூடான காபியை குடியுங்கள்.
 தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்....!
 
12.#சுறுசுறுப்புக்கு_சுக்கு_வெந்நீர்'
 
தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும்,
 கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும்  கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி   (micro family) எனப்படும்
 3 அல்லது 4 பேரைக் கொண்ட 
தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது
 கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள்
அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும்
பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால்,
 உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் 
தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 2 photo(s) from this topic.
image002.jpg image001.gif

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment