Tuesday 16 August 2016

[www.keralites.net] இது ஒரு முக்கியமான சிந்தனை.

 



 

Subject:  
படித்ததில் பிடித்தது.பதிவிடுகிறேன்.

=
இது ஒரு  முக்கியமான சிந்தனை.
 
 
ஆனால்
உதாரணத்துக்காக திரைப்பட நடிகர்களைப் பயன்படுத்துகிறேன். எல்லோருக்கும் எளிதாகப் புரியவேண்டும் என்பதற்காக... @ நடிகர் சூர்யா வசதியாகப் பிறந்தார்வசதியாக வளர்ந்தார், வசதியாக இருக்கிறார் அவரது வாழ்க்கை முழுக்க வசதி.  @ அடுத்து எம்.ஜி.ஆர் ஏழ்மையில் பிறந்தார், வறுமையில் வளர்ந்தார், செழிப்பாக இருந்தார்,
செழிப்பாக மறைந்தார். @ அடுத்து ராமராஜன் வறுமையில் பிறந்தார், வறுமையில் வளர்ந்தார், செழுமையில் சிலகாலம் வாழ்ந்தார், மீண்டும் வசதிகுறைந்தார்.
@
அடுத்து தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டில் சோறுண்ட தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார். பிற்காலத்தில் ரயில்வே பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்து அதன்பின் மடிந்தார். @ இப்படி வறுமையிலே பிறந்து, வறுமையிலே வளர்ந்து, வறுமையிலே வாழ்ந்து, வளமையென்றால் என்னவென்றே அறியாமல் வறுமையிலேயே மடிந்தவர்களும்
இருக்கின்றார்கள். எல்லோருமே நடிகர்கள்தான் ஆனால் அவர்கள் வாழ்ந்தவிதத்திலேதான் வித்தியாசம். ஒருவருக்கமைவதுபோன்ற வாழ்க்கை அடுத்தவருக்கு அமைவதில்லை.
 

உன் வாழ்க்கை உன் கையில் என்பதெல்லாம் பொய்.
நாம் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே தீரவேண்டுமென்பது விதி. விதியை மதியால் வெல்லலாம் என நான் ஒருகாலத்தில் நினைத்ததுண்டு. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அந்த சிந்தனை மாறியது. பிச்சைக்காரனாக தெருவில் அலைந்த ஒரு முன்னாள் செல்வந்தரைக் கண்டவுடன் வாழ்க்கை பற்றிய என் கணக்கு வேறாக மாறியது. சாலையில் திரியும் ஒவ்வொரு பைத்தியமும் ஒவ்வொரு பிச்சைக்காரனும் உங்களையும் என்னையும்போல் ஏன் பலசமயங்களில்
நம்மைவிடச் சிறப்பாக ஒருகாலத்தில் வாழ்ந்தவன்தான். என்றாவது அவர்களை நாம் நின்று கவனித்ததுண்டா? எதனால் அவன் இப்படி ஆனான்? என்ன காரணத்தால் அவன் ரோட்டில் திரிகிறான் நம்மில் எவராவது  கேட்டதுண்டா? நம்மைப்பொறுத்தவரை அவன் ஒரு பிச்சைக்காரன் அப்படித்தான் இருப்பான் என்ற நினைப்பு உறுதியாகி விட்டதுதான்  காரணம். நம்மை பாதிக்காத எந்த செய்தியும் நமக்கு மற்றுமொரு நிகழ்வே. யார்கண்டது? நாளையே நீங்களும் நானும் அந்த நிலைக்கு மாறக்கூடும். அது எப்படி முடியும்? நான் அரசு அதிகாரியாக இருக்கிறேன். ஊர்முழுக்க சொந்தபந்தங்கள் இருக்கிறார்கள்சொத்துபத்து இருக்கிறது அது எப்படி நிகழும் என்கிறீர்களா? உங்கள் மூளையில் உண்டாகும் ஒரு சிறு அதிர்வு உங்களுக்கு  சித்தம்கலங்கவைத்து இந்த நிலைக்கு மாற்றிவிடும், மறுக்க முடியுமா உங்களால்இங்கே எந்தநிலையும் நமக்கு
 
உறுதியான பாதுகாப்பான நிலையல்ல. ஒரு நிமிடத்தில் நம் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடலாம்அதற்கான சான்றுகள் இங்கே ஏராளம். கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தில்தான் நான் முதன்முதலாகப் பட்டினத்தாரைப் படித்தேன். அவர் எனக்குள் விளைவித்த கேள்விகள் பல. என்னையறியாமலேயே
பட்டினத்தார் என்னை ஆட்கொண்டார். பலதலைமுறைக்கும் அழியாத சொத்துபத்து நிறைந்திருந்த அவர் ஒரு கரும்பைக் கையில் எடுத்துக் கொண்டு கோவணத்தைக் கட்டிக்கொண்டு திருவோட்டைக் கையில்  வைத்திருந்தால் அதுவொரு சொத்தாகிவிடுமென்று அதைக்கூடத்  தூக்கியெறிந்து ஊரூராய்த் திரிந்தநிகழ்ச்சி என்னை ஒரு உலுக்கு உலுக்கியது.வாழ்க்கையென்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து முடிப்பவர் பலர்,வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயற்சித்து  அது முடியாமலேயே முடிந்துபோனவர் பலர்.ஆனால் பட்டினத்தார், புத்தன் போன்றவர்கள் வாழ்க்கை எதற்காக என்ற சூட்சுமத்தைக் கண்டு பிடித்துவிட்டனர். அதனால்தான் அந்தவகையான பற்றற்ற  வாழ்க்கையைக் கடைசிவரை அவர்களால் வாழ முடிந்திருக்கிறது. அந்த ஞானமும்கூட அவர்கள் நெடுங்காலம் சிந்தித்ததால் விளைந்த ஞானமல்ல. இதோ இப்போது நான் சொல்லிக்கொண்டிருக்கிறேனே இந்த  அளவுகூட அவர்கள் சிந்தித்திருக்க மாட்டார்கள். சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும்போதுதான் ஒருநாள் திடீரென யாக்கை நிலையாமையும் வாழ்வின் சூட்சுமமும் அவர்களுக்குப் புரிந்து போயிற்று. 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்ற நிதர்சனமும், 'துன்பத்திற்குக் காரணம் ஆசையே' என்ற தத்துவமும் தேடிவந்து அவர்களைப்பற்றியது. அதற்காக நிலையற்ற தன்மையை எண்ணியெண்ணி இருக்கும் வாழ்வைப் பற்றற்றுக் கடத்த வேண்டு மென்பதில்லை. சித்தார்த்தனுக்கும், பட்டினத்தாருக்கும் ஏற்பட்ட ஞானோதயத்தை நாம் தேடிச்சென்று அடையவேண்டுமென்ற அவசியமுமில்லை. என்னதான் சொல்லவருகிறாய் என்கிறீர்களா? சொல்கிறேன். ஞானப்பெருவாழ்வு வாய்த்தவர்கள் மட்டுமே அதனை வாழ்வதுதான் நல்லது. எவரும் வலிய முயற்சிசெய்து அதனை வாழ்வதென்பது சாத்தியமாகாது. மற்றவர்கள் வாய்த்த வாழ்க்கையை நிறைவானதாக வாழ்ந்தால் போதும். எது நிறைவான வாழ்வு
என்ற கேள்வி இங்கே எழும். வாழ்க்கைச்சூழலை நாம் என்னதான் அமைத்துக்கொள்ள முனைந்தாலும் நம் எண்ணத்திற்கேற்ப முன் வினைகளும் இன்னும்பல விவரிக்கமுடியாத கோர்வைகளும் ஒருசேரத்திரண்டு வந்தால்தான் வாழ்க்கையின் பாதை நாம் நினைக்கும் படியாக அமையும். நாம் பிறக்கும் வயிறுமுதற்கொண்ட ு அமைத்துக் கொள்ளும் வாழ்க்கைத்துணைபார்க்கும் மனிதர்கள், அமையும் எதிரிகள்காரியங்களால் விளையும் பலன்கள் என எதுவும் நம் கையில் இல்லை.
எப்படி நம் முகத்தை நம்மால் தேர்வுசெய்ய முடியாதோ, எப்படி நம் பெற்றோரை நம்மால் தேர்வுசெய்ய முடியாதோ, எப்படி இறப்பை நம்மால் தேர்வுசெய்ய முடியாதோ, எப்படி நம் உணவைக்கூட நம்மால் செரிக்கவைக்க முடியாதோ அப்படியே வாழ்வின் போக்கையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. இல்லையே நான் ஆசிரியனாக ஆசைப்பட்டேன் அதன்படியே ஆகிவிட்டேன் என்று சொல்வீர்களானால் நீங்கள் முன்குறிக்கப்பட்டதையே ஆசைப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள். முன்குறிக்கப்பட்டதை நாம் ஆசைப்படலாம் ஆனால் நாம் ஆசைப்பட்டதெல்லாம் முன்குறிக்கப்பட்டிருக்காது. அதனால்தான் எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற மனிதன் என்றுஇங்கே எவனுமில்லை. அதனால் அவனைவிட நாம் உயர்ந்தவன் இவனைவிட நாம் தாழ்ந்தவன் என்ற முடிவிற்கு எப்போதும் வராதீர்கள். வனுக்குக் கிடைத்தது நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தை வளர்த்துக்கொள்ளாதீர்கள்உதாரணத்திற்கு, நானும் அவனும் ஒன்றாகத்தான் படித்தோம். சொல்லப்போனால் அவனைவிட நான் நன்றாகத்தான் படித்தேன்.
ஆனால் பணமிருந்ததால் அவன் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்து பெரிய பொறியாளன் ஆகிவிட்டான், நான் கலைக்கல்லூரியில் பயின்று ஒன்றுக்கும் உதவாதவனாக மாறி இன்று அஞ்சுக்கும் பத்துக்கும் ஆளாய்ப் பறக்கிறேன்அவனோ காரில் பறக்கிறான் என்பது போன்று ஏங்காதீர்கள். நீங்கள் இந்த அஞ்சுக்கும் பத்துக்கும் ஆளாய்ப் பறந்துதான் உங்கள்  வாழ்வை நகர்த்தவேண்டுமென்பது உங்கள் விதி. அதனாலேதான் நீங்கள் பொறியாளன் ஆகவில்லை. கலைக்கல்லூரியில் பயின்ற எத்தனையோ பேர் எவ்வளவோ பெரிய ஆளாகவெல்லாம் ஆகியிருக்கின்றார்கள்பொறியியல் படித்தவர்களும் தெருவில் நின்றிருக்கின்றார்கள். ..எஸ் ஆகும் முயற்சியில் ஈடுபட்டு ஒரு பியூன்கூட ஆகமுடியாமல் போனவர்களெல்லாம் ஏராளம் இருக்கின்றார்கள். பொறியியல் பயிலாததாலோ கலைக்கல்லூரியில் பயின்றதாலோ நீங்கள் இந்த வாழ்க்கையை  வாழவில்லை. ஊழ்வினை உங்களைச் செலுத்தும் படிதான் வாழ்வு நகரும்.தலைகீழாகக் கர்ணம் போட்டாலும் நம்மால்  முடியாது என்பதை மனதில் நிறுத்துங்கள். நமது இந்த வாழ்வுக்கு நாம் காரணமல்ல என்பதை முதலில் நாம் உணரவேண்டும். நாம் வாழும் இந்த வாழ்வுக்கு நாம் காரணமல்ல என்று எப்படி நாம் உணர்ந்துகொள்கிறோமோ அப்படியே அடுத்தவன் வாழும் வாழ்க்கைக்கும்  அவன் காரணமல்ல என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அதை உணர்ந்ததால்தான் 'தவறுசெய்யும் ஒரு மனிதனை ஏழிலிருந்து எழுபதுமுறை மன்னியுங்கள்' என இயேசுகிறிஸ்து சொல்கிறார். அடுத்தது என்ன என்கிறீர்களா? நாம் வாழும் சூழல் நம்மால் அமைக்கப்பட்டதில்லை சரி, எதற்கும் ஒப்பீடு கூடாது சரி, எதற்கும் ஏங்கக்கூடாது சரி ஆனால் நிறைவான வாழ்வு என்பதை எப்படி வாழ்வது என்கிறீர்களா? சொல்கிறேன். நமக்கு வாழ்க்கையும் சூழல்களும்தான் பிற காரணிகளால் அமைகிறது. ஆனால் அங்கே செயல்படுவது நாம்தான் எனவே ஏக்கத்தைத் தவிர்த்து, உயர்வுதாழ்வு விடுத்து, அமைகின்ற சூழல்களில் எவ்வளவு சிறப்பாக செயல்படமுடிகிறதோ அவ்வளவு சிறப்பாக செயல்படவேண்டும். எல்லோருக்கும் உலகப்புகழ்பெறும் வாழ்க்கை வாய்த்துவிடாது. அதேபோல் எல்லோருக்கும் அடிமை வாழ்வும் அமைந்துவிடாது. ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொருவிதமான வாழ்க்கை வாய்க்கும். ஆனால் வாய்த்தது பிச்சைக்கார வாழ்க்கை யானாலும் சரி அமைந்திருக்கும் வாழ்க்கையில் ஆசாபாசங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்காமல், சந்தர்ப்பவாதத்தையும் சுயநலத்தையும் பொய்மையையும் தவிர்த்து, எவருக்கும் கேடு விளைவிக்காமல், தர்மநியாயங்களுக்குக் கட்டுப்பட்டு அவ்வளவு சிறப்பாக வேறு எவராலும் செயல்பட்டிருக்க முடியாது என்ற அளவில் எல்லாச்சூழல்களிலும் செயல்படுதல் வேண்டும். அதுவே வெற்றி கரமான வாழ்க்கை. அர்த்தமுள்ள வாழ்க்கை. கடந்துபோன வாழ்வின் ஒவ்வொரு சூழலையும் வாழ்வின் கடைசியில் நாம் அசைபோடும்போது அந்தச் சூழ்நிலையில் அதைவிடச் சிறப்பான எந்தமுடிவையும் நம்மால் எடுத்திருக்கமுடியாது நாம் சரியாகத்தான் பயணித்திருக்கிறோம் என  எண்ணி நமக்குநாமே உளமார திருப்திப்பட்டுக்கொள்ளும் படியாக வாழ்வதுதான்  நிறைவான வாழ்க்கை.

நன்றி
 
(வாட்ஸப்பில் வந்தது)
செத்துட்டான் சேகர்.....
ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்.....
இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான்.
சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும்.
சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க ?
சித்ரகுப்தன் : லவ்
சேகர் : L O V E
சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க.
சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது?..
சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்....நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும்
. .
சேகர் : சரிங்க சாமி !!
சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால் இதே கேள்வி அவங்ககிட்ட கேளு. கரெக்டா ஸ்பெல்லிங் சொல்லிட்டாங்கனா அவங்கள நீ சொர்க்கத்துக்குள்ள அனுப்பிவிடு. தவறாக கூறினால் நீ அவங்களுக்கு அடுத்த கேட் போகச்சொல்லு. அது நரகத்துக்கு போற கேட்.. நீ பயப்படாத அங்க போனவங்க மறுபடியும் திரும்பி வரமாட்டாங்க. கேட்கிட்ட போனதுமே அவங்க நரகத்துல விழுந்திருப்பாங்க. ... இதைக்கேட்டதும் சேகர் நடுங்கிப் போயிட்டான்....
சேகர் : சரிங்க சாமி !!
சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல ஒரு பெண் அங்கு வருவதை சேகர் பார்த்தான்!
சேகர் அதிர்ச்சி அடைந்தான்.....
காரணம் அது சேகரின் மனைவி.
சேகர்: நீ எப்படி இங்க வந்த ? !
மனைவி : அதாங்க... உங்க பிணத்த எரிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழியில என்ன ஒரு பஸ் இடிச்சிட்டு. பின்ன நான் பார்க்கிறது இந்த இடந்தான். சொர்க்கத்திற்குள் ஓடிவந்து நுழையப்பார்த்த மனைவியை தடுத்து நிறுத்தி சேகர் சொன்னான்..
நில் நில் இங்கவுள்ள சட்டப்படி நீ சொர்க்கத்துக்கு போகணும்னா ஒரு வார்த்தைக்கு SPELLING சொல்லணும் . கரெக்டா spelling சொன்னாமட்டும்தான் சொர்க்கத்துக்குள்ள போக முடியும் . இல்லைனா அடுத்த கேட் வழியா நீ நரகத்துக்குத்தான் போகணும்.
மனைவி : என்ன வார்த்தை ?
சேகர் : செக்கோஸ்லோவாகியா.
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment