Power Point of this subject is attached with this mail
Subject: கதை ஒன்று அறிவுரைகள் பல
1
2
3
4
5
6
7
8
9
10
11
Power Point of this subject is attached with this mail
If You want to see the above in Power Point Style go to the bottom and click the view Presentation
For your Printing Purpose
- கதை ஒன்று - அறிவுரைகள் பல … .. ராமாயணத்தில் இருந்து ஒரு கதை
- அயோத்தி அரண்மனை . ஸ்ரீராமர் தனது குரு விசுவாமித்திரர் மற்றும் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்தார் ஒரு அரசர் . ஸ்ரீராமரை வணங்கினார் . சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினார் . மற்றவர்களும் ஸ்ரீராமரிடம் விடைபெற்று கிளம்பினர் . இதன்பின் விசுவாமித்திரரை சந்தித்தார் நாரதர் . " விசுவாமித்திரரே ! ஸ்ரீராமரை வணங்கிய அந்த மன்னன் , உங்களை வணங்கவில்லையே ? உங்களை வணங்காமல் அவமதித்த அவனை " போனால் போகட்டும் " என்று பெருந்தன்மையாக விட்டுவிட்டீர்களா ? பெருந்தன்மை குணம் நல்லதுதான் , ஆனால் அது மற்றவர்கள் தவறுகளைத் தொடர்வதற்கான முன்னுதாரணம் போல் மாறிவிடக்கூடாதே , என்று அப்பாவி போல் கேட்டார் .
- அவரது " கலகம் " நன்கு வேலை செய்ய ஆரம்பித்தது ... . ஆவேசத்தில் கொந்தளித்தார் விசுவாமித்திரர் . " என்னை அவன் வணங்காததை நான் கவனிக்கவில்லை ! கவனத்திருந்தால் அப்போதே அவனைக் கண்டித்திருப்பேன் ! தண்டித்திருப்பேன் " நாரதரே .. நீர் நேரடியாகக் கேட்டுவிட்டீர் . ஆனால் எத்தனையோ பேர் " இவ்வளவுதான் விசுவாமித்திரரின் மதிப்பு " என்று தங்களுக்குள் என்னைப் பரிகசித்துக் கொண்டிருப்பார்களே ... ச்சே இப்படி ஒரு அவமானம் எனக்கு வந்துவிட்டதே ? என்ன திமிர் அந்த மன்னனுக்கு ?. இன்று மாலைக்குள் அவன் தலை என் காலடியில் உருளும் ... பாரும் நாரதரே ! " இந்த விசுவாமித்திரரை அவமதித்தால் இதுதான் கதி என்று அனைவருக்கும் பாடக் கற்பிக்கிறேன " என்று படபடத்த விசுவாமித்திரர் , நேரடியாக ஸ்ரீராமரிடம் சென்றார் .
- " ஸ்ரீராமா இன்று அரண்மனைக்கு வந்த மன்னன் என்னை வணங்காமல் அவமதித்துவிட்டான் ... அவன் தலை இன்று மாலைக்குள் என் காலடியில் விழவேண்டும் . இது குரு என்ற ஸ்தானத்தில் இருந்து நான் உனக்கு நான் விடுக்கும் கட்டளை !", என்றார் . " அப்படியே செய்கிறேன் , குருதேவா !" என்று ஸ்ரீராமரும் அந்த மன்னனைத் தேடிக் கிளம்பி னார் . இதையெல்லாம் கவனித்த நாரதர் . ஆகாயமார்க்கமாக விரைந்து சென்று அந்த மன்னரைச் சந்தித்தார் . விசுவாமித்திரரின் உத்திரவுப்படி அவனைக் கொல்ல ராமர் வந்து கொண்டிருப்பதைத் தெரிவித்தார் . அய்யோ சிறிய அலட்சியத்தால் பேரபாயத்தில் சிக்கிவிட்டேனே விசுவாமித்திரர் கோபம் நிறைந்தவராயிற்றே .. அவரிடம் மன்னிப்பு கேட்டாலும் மனமிரங்கமாட்டாரே , ஸ்ரீராமர் நிழலோடுகூட என்னால் போரிட முடியாதே என்று பதை த்த ஸ்வாமி நீங்கள்தான் எப்படியாவது என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று நாரதரின் பாதங்ளப் பிடித்து கதறினான் . பதைத்த அந்த மன்னன்
- அவனிடம் நாரதர் , " கலங்காதே மன்னா ... நீ தப்பிக்க ஒரே ஒருவழி இருக்கிறது . ராமபக்தரான ஆஞ்சநேயரால் மட்டுமே உன்னைக் காப்பாற்ற முடியும் !. ஆனால் நீ அவரிடம் சென்று " ஸ்ரீராமரின் பானங்களில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள் " என்று கேட்டால் அவர் சம்மதிக்கவே மாட்டார் . அதனால் . நீ நேராக அவரது தாய் அஞ்சனாதேவியிடம் சென்று அவளது பாதங்களைப் பணிந்து சரணாகதி கேள் . அவள் உன்னைக் காப்பாற்றும்படி ஆஞ்சநேயரிடம் சொன்னால் அவர் தட்டமாட்டார் . தாமதிக்காமல் உடனே சென்று அஞ்சனாதேவியை சரணடைந்துவிடு !" என்று ஒரு ஆலோசனையளித்தார் . அஞ்சனாதேவியை சரணடைந்தான் அந்த மன்னன் . மனமிரங்கிய அவள் , ஆஞ்சநேயரை அழைத்து " மகனே ! என்னிடம் சரணடைந்த இவனைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை !" என்று வலியுறுத்தினாள் .
- தர்மசங்கடத்தில் தவித்த ஆஞ்சநேயர் , " தாயே .... நான் ஸ்ரீராமருடன் ஒருபோதும் போரிட மாட்டேன் !. ஆனால் , இந்த மன்னனின் உயிரைப் பறிக்க அவர் வீசும் பாணங்களை என் உடலில் தாங்கி இவரைக் காப்பாற்றுகிறேன் " என்று வாக்குறுதியளித்தார் . இதன்பின் தன் வாலை வளர்த்து கோட்டை போல் மாற்றினார் ஆஞ்சநேயர் . அதற்குள் அந்த மன்னரைப் பத்திரமாகத் தங்கவைத்து , வால் கோட்டை மீது அமர்ந்து கொண்டார் . சிறிது நேரத்தில் ஸ்ரீராமர் அங்கு வந்தார் . மன்னரைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி ஆஞ்சநேயரிடம் கேட்டார் . கை கூப்பிய ஆஞ்சநேயர் " ஸ்வாமி இவரை மன்னித்து ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்களேன் " என்று கெஞ்சினார் . " இன்று மாலைக்குள் இவனது தலை தனது காலடியில் விழவேண்டும் என்று என் குருநாதர் உத்திரவிட்டுள்ளார் ...
- அதை என்னால் மீற முடியாது ... இவனை மன்னிக்க முடியாது " என்று ஸ்ரீராமர் சொன்னதும் " ஸ்வாமி .... இவரைக் காப்பாற்றுவதற்காக என் தாய்க்கு வாக்களித்திருக்கிறேன் . எனவே என் உயிர்இருக்கும்வரை இவரை ஒப்படைக்க முடியாது " என்று சொல்லிவிட்டு ராமநாம ஜபத்தில் மூழ்கிவிட்டார் . ஆஞ்சநேயரை நோக்கி சக்திவாய்ந்த பல ஆயுதங்களை ஸ்ரீராமர் ஏவினார் . ஆனால் அவையெல்லாம் ஆஞ்சநேயரின் பாதங்களில் புஷ்பங்களாக மாறி விழுந்தன . ஸ்ரீராமர் திகைத்து நிற்க ... அங்கு விசுவாமித்திரரையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்தார் நாரதர் .
- ஸ்ரீராமா ! உன் ஆயுதங்களைவிட , ஏன் உன்னைவிட உன் நாமத்திற்கு சக்தி அதிகம் .... சதா சர்வகாலமும் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயரை உன்னால் எதுவும் செய்ய முடியாது !. உன்னை விட உன் நாமத்திற்கு மகிமை அதிகம் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே நான் இப்படி ஒரு கலக நாடகத்தை அரங்கேற்றினேன் . அந்த மன்னனை விட்டுவிடு !" என்று நாரதர் கூறினார் . " அப்படி விட்டுவிட்டால் என் குரு விசுவாமித்திரரின் உத்திரவை மீறியவனாகிவிடுவேனே ?" என்று ஸ்ரீராமர் கேட்டார் .
- " பொழுது சாய்வதற்குள் இந்த மன்னனின் தலை தனது காலடியில் விழவேண்டும் என்றுதானே விசுவாமித்திரர் உத்திரவிட்டார் ?". அதற்கு இந்த மன்னன் அவரது பாதங்களில் தலையை வைத்து பணிந்து வணங்கினால் போதுமே " என்று சி ரி த்தார் நாரதர் . இதன்படி அந்த மன்னனும் ஓடோடி வந்து விசுவாமித்திரரின் பாதங்களில் தலையை வைத்து வணங்கி மன்னிப்பு கேட்டார் . அவரும் அவனை மன்னித்தா ர் .
- கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் ... சிறு அலட்சியமும் பேரபாயத்தை ஏறபடுத்தும் , குரு மற்றும் பெற்றோர் பேச்சைத் தட்டக்கூடாது , தெய்வத்திருநாமங்களுக்கு மகத்தான சக்தி உண்டு , தர்மசங்கட சூழல்களை வெற்றிகரமாக சமாளிக்கும் வழிவகை என்று இந்த ஒரு கதைக்குள் , எத்தனை அற்புத அறிவுரைகள்
- நன்றி தினமலர் பெண்கள் மலர் 2342011 உங்களுக்கு வழங்குபவர் நா . பிரசன்னன்
Hey,
Your friend NA.PRASANNAN has suggested the following SlideShare presentation for you.
"I think you will find this presentation useful." Want more from SlideShare?
Go Pro To change email settings on SlideShare, login to your account or contact SlideShare support for help.Regards,N.Prasannan, Trichy Tamil Nadu, n.prasannam@gmail.com,9941505431, 9488019015,See my slideshare site for All Language Power Points:English: http://www.slideshare.net/nprasannam,Malayalam: http://www.slideshare.net/nprasannammalayalam,--
__._,_.___
Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post | • | Reply to sender | • | Reply to group | • | Start a New Topic | • | Messages in this topic (1) |
Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.
KERALITES - A moderated eGroup exclusively for Keralites...
To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.
To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.
Homepage: http://www.keralites.net
To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.
To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.
Homepage: http://www.keralites.net
.
__,_._,___
No comments:
Post a Comment