SlideShare | Hi, Your friend suggests that you view this presentation."I think you will find this presentation useful." Did you know? You can generate customer leads with your presentations, PDFs, ebooks, webinars. Try Leadshare now. | | | |
We have your email address as
n.prasannam@gmail.com.
Click
here to unsubscribe from ALL SlideShare emails or
here to adjust your email notifications.
PRINTING PURPOSE
நண்பர்களே
நம் வாழ்க்கையில் ஆனந்தம் அட்சயபாத்திரமாக இருக்கவேண்டும் என்பதுதானே நம் அனைவரது விருப்பம். அதற்கு எந்த புரட்டிப்போடும் புரட்சியும் தேவையில்லை. நம்முள் கொஞ்சம் மாற்றம் போதும். என்னை நானே கொண்டாடிக் கொள்கிறேன் என்பார் ஓஷோ ரஜனிஸ். ஆனந்தமான வாழ்க்கைக்கு சில அனுபவ கருத்துக்கள்.
சந்தோஷம் என்பது வாங்கும பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம் தான். கண்ட்ரோல் நம்மிடம்தான். ஆனந்தமாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே
வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாக கழிக்காதீர்கள். கொஞ்சம் இலகுவாகவும், நகைச்சுவையாகவும் அணுகுங்கள். அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள். தினமும் இரண்டு மூன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள். சிரிப்பு ஒரு தொற்றுநோய் இடம்விட்டு இடம்பெயர்ந்து ஆரோக்கியமாக பரவும்.
ஆனந்தம் என்பது லக் அல்ல. நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுதான் என்பதில் தெளிவாக இருங்கள். அன்னப்பறவையாக மாறி நல்லவற்றையும் அதிகம் கவனியுங்கள். உங்களை கடந்து போகும் சம்பவங்களில், சந்தோஷமான விஷயங்களை அதிகம் உள்வாங்குங்கள்.
தாழ்வு மனப்பான்மையைத் துரக்கி கடலில் போடுங்கள். ஏதேனும் தவறு. தோல் நடந்தால் அதற்குரிய காரணத்தை ஆராயவேண்டுமே தவிர நத்தை ஓட்டுக்குள் முடங்கி விடக்கூடாது.
உங்கள் மனதை நீங்கள்தான் உற்சாகப்படுத்தவேண்டும். குழந்தைகளுடன் செலவிடும் சந்தோஷ தருணங்கள், நல்ல நகைச்சுவை திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்கள் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்,
ஆன்மீகவாதியாக இருங்கள். ஆனால் மதவாதியாக மாறிவிடாதீர்கள். உங்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் தரும் நுரல்களை வாசியுங்கள்.
கவலைகள் இல்லாத மனிதன் இல்லை. அவற்றையும் வாழ்க்கையின் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்ளுங்கள். காலம் கவலையை ஆற்றிவிடும்.
தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களக்கு காத்திருக்கிறது என்று விழித்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கைக்கு செல்லும் முன் அன்றைய நாளின் சந்தோஷங்களை அசை போடுங்கள். யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க முடிவெடுங்கள்.
திருமணமாகி சில ஆண்டுகளிலேயே சுவாரஸ்யங்கள் எல்லாம் காணாமல் போய்விடுகிறது. இது மிக தவறு. அடிக்கடி வாழ்த்து அட்டைகள் வழங்குவது அதுபோல் குடும்பத்துடன் கோவில் த தரிசனம். சுற்றுலா செல்வது என அன்புக்கு பெட்ரோல் போட்டுக்காண்டே இருங்கள். எதை செய்தாலும் விரும்பிச் செய்யுங்கள்.
உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை அறிந்து வைத்திருங்கள். நீங்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பையும் அக்கறையும் அவருக்கு உணர்த்தும் வழிகள் இவை.
நட்பு என்பது பண்டமாற்றுப் பொருள் அல்ல. அது இயல்பாக வழியும் அருவி போன்றது. எனவே எந்த ஆதாயமும் எதிர்பாராமல் நட்பு பாராட்டுங்கள்.
உறவுகள் எல்லாம் உறவுகள் இல்லை. நம் மீது அன்பு காட்டும் அனைவரும் நம் உறவுகள் ஒரு தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும் இருஇதுதான் உண்மை பிறரிடம் அன்பு காட்டாதவர்கள் அனாதைகள்.
எத்தனை பூஜைகள் செய்தாலும். எத்ததனை தர்மங்கள் செய்தாலும் அந்த பலன்கள் உன்னை வந்து அடைய வேண்டுமானால் உன்னால் பாதிக்கப்பட்டவர்கள் உன்னை வாழ்த்த வேண்டும்.
கடவுள் மனிதனல்ல, லஞ்சம் கொடுத்து தனது ஆசைகளை நிறைவேற்ற
எடுத்துச் செல்ல எதுவும் இல்லை. கொடுத்துச் செல்வோம் கண்கள் இரண்டை.
நன்றி பி.ஆர்.இராதாகிருஷ்ணன். சாய் நிவாஸ். ஆறுமுகம் வீதி. 17,244. திருநகர். ஈரோடு
திருச்சி நா.பிரசன்னா
Mobile: 9941505431, 9488019015
No comments:
Post a Comment