Wait,
Animated Picture
My Whatsapp Number: 9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
11-02-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
OM MURUGA AROHARA
முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள்
கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.*
1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம்,
கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
2. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை
அழித்த இடம் மூன்றாகும்.
*1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,
3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை
வதம் செய்தது போரூர் ஆகும்.*
3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில்
குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய
அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி
நன்மை உண்டாகும்.
4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு,வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும்
கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
5. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.
6. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம்,
கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.
7. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான்.
ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான்.
கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.
8. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.
9. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி,
ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே
முருகன் ஆவான்.
10. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.
11. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.
12. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில்
முருகனை மட்டுமே காண முடியும்.
பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.
13. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள்
உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம்,
குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல்,
வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.
14. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும்
முருகன் வழிபாடு உள்ளது.
15. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.
16. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு.
விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.
17. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு.
இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.
18. முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை,
சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.
19. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.
20. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத
வேறு தெய்வம் வீரபத்திரர்.
21.முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனை கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை
வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகை யில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.
22. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று
சொல்லப்படுகின்றது.
23. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில்
படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார்.
இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
24. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம்,
2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.
25. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம
என்பதாகும்.🙏🙏🙏🙏 தான்தோன்றீஸ்வரர் வாட்ஸ்அப்🙏9994461619.
...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
-------------------------------------------------------------------------------------
As received in my WhatsApp message
SIVA-RECT 72
09842473192
__._,_.___
View attachments on the web Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post | • | Reply to sender | • | Reply to group | • | Start a New Topic | • | Messages in this topic (1) |
Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.
KERALITES - A moderated eGroup exclusively for Keralites...
To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.
To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.
Homepage: http://www.keralites.net
To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.
To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.
Homepage: http://www.keralites.net
.
__,_._,___
No comments:
Post a Comment