Thursday, 26 January 2017

[www.keralites.net] 27-01-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் தை அமாவாசை விரதம்:( 27-01-2017 )🅱 நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்".

 





தை அமாவாசை விரதம்:( 27-01-2017 )🅱
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
27-01-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
birds.gif
 
 
27117T.JPG
 
தை அமாவாசை விரதம்:( 27-01-2017 )🅱
 
🌷💦🌷💦 BRS🌷💦🌷💦🌷
 
தை அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.
 
 தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.
 
ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசையான நாளில் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.
 
கடல் கூடும் கன்னியாகுமரி, ராமேசுவரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும். ராமேசுவரத்தில் புகழ் பெற்ற ராமநாதசுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும்.
 
கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். ராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
 
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீ நெல்லையப்பர்காந்திமதியம்மன் கோவிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக பிரகாச ஜோதியாகவே காணப்படும்.
 
பல்லாயிரக்கணக்கானோர் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவார்கள் என்கிறார்கள்.
 
🅱 திருமண தடை நீங்கும்:🅱
 
பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.
 
முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந் நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
 
அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.
 
🅱 காகத்திற்கு உணவிடுங்கள்:🅱
 
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு.
 
காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
 
பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.
 
🅱 அமாவாசை வழிபாடு:🅱
 
வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் `பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை `மாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும்.
 
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர். இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.
 
இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர். தை அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
 
பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
 
🅱 புண்ணிய நதியில் நீராடல்:🅱
 
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றனஅதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம்.
 
அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.
 
சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.
 
🅱 முன்னோரின் ஆசி:🅱
 
திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.
 
துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது.
 
பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும். சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர்.
 
இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக் கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச் சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.
 
சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது.
 
🅱 கொடிய பாவங்கள் நீங்கும்:🅱
 
மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாக பிறந்தால் தான் இறைவனை எளிதில் அடைய  முடியும்.வேறு எந்தப் பிறவிக்கும் இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்க முடியாது .
 
ஆக இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு  நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும்  ஒரு விழாவாக அமாவாசையை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.
 
அந்த மாதத்தில் வரும் அமாவாசையில் கடற்கரை தலங்களுக்குச் சென்று முன்னோருக்குச் தர்ப்பணம்  செய்து வரலாம். சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது. இக்கோவிலுக்குள் உள்ள மணிகாணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.
 
இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து, நிவர்த்தி பெற்று வரலாம். பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையலாம்.
 
இந்தக் கோவில் எதிரே உள்ள கடல், ஆதி சேது என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ராமேஸ்வரத்துக்கு சமமானது இந்த கடல் தீர்த்தம். இதில் ஒரு முறை நீராடுவது ராமேசுவரத்தில் நூறு தடவை நீராடுவதற்கு சமம் என்பர். தை அமாவாசை, மாசி மாத, மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடுவர். இவ்வூர் அருகில் உள்ள கோடியக்கரை கடல் தீர்த்தமும் மிகவும் புனிதமானது
 
 🅱 புண்ணியமான பிதுர்க்கடன்:🅱
 
பிதுர்களுக்குத் திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்திலேயே, பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்கச் சொல்லியுள்ளனர். முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்கவேண்டும் என்பது விதி. இதன் காரணமாக, இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை. உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.
 
🅱 4 பிள்ளைகள் பெற்ற ரகசியம்:🅱
 
தசரதர் பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகத்தை ரிஷ்ய சிருங்கமுனிவரின் தலைமையில் செய்தார். யாகத்தின் பயனாய் கிடைத்த பாயாசத்தை பட்ட மகிஷிகள் கோசலை, கைகேயி இருவரும் தங்கள் பங்கு போக மீதியை சுமித்ராவிற்குக் கொடுத்தனர். அதனால், கோசலைக்கு ராமன், கைகேயியிக்குப் பரதன், சுமித்ராவிற்கு லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர். ஆனால், இந்த நால்வரின் பிறப்புக்கு வேறொரு காரணமும் சொல்வதுண்டு. ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டால், அந்த பிள்ளை பிதுர் தர்ப்பணத்தை கயா க்ஷேத்திரத்தில் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்ததாம். கயாவில் பிதுர்க்கடன் செய்வது மிகவும் விசேஷம். அதனால், ஒருவன் இல்லாவிட்டால் வேறொருவனாவது கயாவில் தனக்குப் பிண்டம் போடுவான் என்று தசரத சக்கரவர்த்தி நினைத்தார். அதனாலேயே தனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கட்டும் என்று முடிவெடுத்ததாக வால்மீகி ராமாயணத்தில் ஒரு செய்தி உண்டு. இதன்மூலம் பிதுர்தர்ப்பணத்தை பிள்ளைகள் அவசியம் பெற்றோருக்கு  செய்யவேண்டும். ராமாயண காலத்திற்கு முந்தியே கயாவில் தர்ப்பணம் செய்யும் பழக்கம் இருந்திருக்கிறது என்ற உண்மைகள் வெளிப்படுகிறது. ஒரு பிள்ளை செய்யாவிட்டாலும் இன்னொரு பிள்ளையாவது முன்னோருக்குரிய பிதுர்க்கடனை அவசியம் செய்ய வேண்டும் ஆகிய கருத்துகளை அறிய முடிகிறது. தசரதருக்கு அந்திமக்கிரியைச் செய்யும் பாக்கியத்தை  பெற்ற பிள்ளை நான்காவது பிள்ளையான சத்ருக்கனனே. ராமனும், லட்சுமணனும் காட்டிற்குச் சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனும் தசரதருக்கு இறுதி கடமையைச் செய்யமுடியாமல் போனது. ராமன் மீண்டும் அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகம் செய்த பிறகு, தசரதருக்காக கயா சென்று பிண்டம் அளித்ததாக ஆனந்த ராமாயணம் கூறுகிறது.
 
🅱 காக பாறை எங்கிருக்கிறது?🅱
 
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்குச் சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்துபோன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாகக் கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்தப் பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடம் உள்ள பொருளை பிறருக்குப் பகுத்துண்டு வாழவேண்டும் என்று வள்ளுவர் நமக்கு போதித்திருக்கிறார். அப்பாடத்தை தவறாமல் பின்பற்றும் குணம் காகத்திற்கு இருக்கிறது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்தபின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுவது சரிதானே!
 
 🅱 மூன்று கை தண்ணீர் போதும்:🅱
 
 முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர்தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே, மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனைநோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக  பெறமுடியும்.
 
 🅱 பிறந்தால் மட்டும் போதுமா?🅱
 
கிருதயுகம், திரேதாயுகங்களில் வருஷதிதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். அந்த யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்தால் இந்நிலை இருந்ததுராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது. துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டனர். ஆனால், சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரநூல்கள் குறிப்பிடுகின்றனஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகிவிட முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்குப் பிறகும் பிதுர்கடனை முறையாகச் செய்யவேண்டும். தனது பித்ருக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று எவன் நினைக்கிறானோ அவன் புத்தியில்லாத மூடனாவான் என்று கடோபநிஷதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் கூறுகிறார்.
 
🅱 சிரார்த்த மந்திரத்தின் பொருள்:🅱
 
சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர். இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக்கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசிவேண்டியும் சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச்சடங்கினைத் தீர்த்தக்கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர். சிரார்த்தம் கொடுக்கும்போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும்போது தானே நிச்சயம் சிரத்தை (அக்கறை) உண்டாகும். கலியுகத்தில் ஜம்புத்தீவில் பரதகண்டத்தில், ….ஆண்டில்.. அயனத்தில் ருதுவில். மாதத்தில் பட்சத்தில் திதியில். வாரத்தில். நட்சத்திரத்தில் எனது பெற்றோரானபெயர் கொண்டவருக்கு சிவயோக பிராப்தம் சித்திப்பதன் பொருட்டு, அவரது பிள்ளையாகிய நான் இந்த சிராத்தத்தை செய்கின்றேன். இதனை ஏற்றுக் கொண்டு ஆசியளிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன் என்பதே சிரார்த்தமந்திரம். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும்.
 
முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம். முன்னோர் வழிபாடு மிக முக்கியமானது என்கிறார் தெய்வப்புலவர் வள்ளுவர். தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும். அதற்குரிய சிறந்த நாள் அமாவாசை. பிற அமாவாசைகளில், மறைந்த முன்னோருக்கு குறிப்பாக பெற்றோருக்கு தர்ப்பணம் செய்ய விடுபட்டு போனாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த நாளில், நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழியும் ஒன்று உண்டு. ஒரு வீட்டில் இரண்டு சகோதரர்கள். ஒருவன் குடிகாரன், முரட்டுப்பயல். இன்னொருவன் பரமசாது, நல்லவன், பக்தன். ஒரு பெரியவர் வீட்டுக்கு வந்தார். குடிகாரனிடம், "ஏனப்பா, இப்படி இருக்கிறாய்? தம்பியைப் போல் சாதுவாக இருக்கலாமே!" என்றார். "ஐயா! இந்த புத்திமதி சொல்ற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். எங்க அப்பா குடித்தார், பெண் பித்தராக இருந்தார், வம்பு சண்டைக்குப் போவார். அப்பா செய்ததை நானும் செய்றேன், இதிலென்ன தப்பு", என்று சொல்லிவிட்டு நிற்காமல் போய்விட்டான். இளையவனிடம், "அப்பா, அப்படிப்பட்டவராக இருந்தும், நீ அப்படி நடந்து கொள்ளவில்லையே, ஏன்?" என்றார். "ஐயா! அப்பா செய்த அந்தக் காரியங்களால் அம்மாவும், குழந்தைகளான நாங்களும், உறவினர்களும், அயல் வீட்டாரும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல! ஒரு மனிதன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக அவர் வாழ்ந்தார். எனவே, அந்தக் குணங்களையெல்லாம் விட்டு, நல்லவனாக வாழ நான் முயற்சிக்கிறேன்", என்றான். நாமும் அப்படித்தான்! நம் முன்னோர் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நம் வாழ்க்கை போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை தை அமாவாசை நன்னாளில் எடுத்துக் கொள்ளுங்கள்.
 
 புண்ணிய தீர்த்தத்தில் கால் வைக்காதீர்கள்
 
தை அமாவாசைக்கு ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, கன்னியாகுமரி ஆகிய கடல் க்ஷேத்ரங்களுக்கும், காவிரி, தாமிரபரணி நதிக்கும் பிற புண்ணிய தீர்த்தங்களுக்கும் மக்கள் தர்ப்பணம் செய்வதற்காக செல்கின்றனர். அங்கு சென்றவுடனேயே, தண்ணீரில் இறங்கி விடக்கூடாது. கரையில் நின்று தண்ணீரை முதலில், தெளித்துக் கொள்ள வேண்டும். புனித நீர்நிலைகளும் கடவுளும் ஒன்றே. தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே என்று சொல்வர். புனித தீர்த்தங் களை நம் தாய்க்கும் மேலாக கருதும் வழக்கத்தை நம் குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். நதிகளை அசுத்தமாக்கக்கூடாது.
 
தர்ப்பணம் செய்ய அமாவாசையை தேர்ந்தெடுத்தது ஏன்?
 
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் உள்ளது. அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது. காலைப்பொழுது பூஜைக்குச் சிறந்தது என்பதால், முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. (தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் (கவனம்) செய்வது என்று அர்த்தம்) அவ்வாறு இயலாத பட்சத்தில், மந்திரம் ஏதும் சொல்லாமல் பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை வேறு யாருக்கேனும் தானம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். பித்ரு பூஜையைச் சரியாகச் செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபம் ஏற்படும். அவ்வாறு சாபம் பெற்ற குடும்பங்களில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.
 
🌹 தி ரு ச் சி ற் ம் ம்🌹
 
இறை அன்பில்
 
💧 மூ.ரா.பாரதிராஜா/8447534825 ; 989166218💧
 
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்".
 "Beware of the situation that Milk will also get treated like Groudnut".
   courtesy BETA & Jallikkattu ban.
 
தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???
 
1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது.
 
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்.
 
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்.
 
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது.
 
5. ஆயில் புல்லிங்.
 
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்.
 
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா.
 
8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா.
 
9. பூஸ்ட் இஸ் சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி.
 
10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்.
 
வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் 
என்ன பயன் ????
 
நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின  அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது.
 
 அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்
அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது.
 
பின்விளைவு
பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று.
 
சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்.
 
பின்விளைவு
அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து.
 
உண்மையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா தான்
 
சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்...
 
டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது
 
இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல்
இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள், நாளை நம்மையும் இழந்து விடுவோம்
 
மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல 
மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..
 
 படித்தேன்.. பிடித்தது...... பகிர்ந்தேன்.....உங்களுக்கு பிடித்தால், உண்மை என்றால் நீங்களும் பகிருங்கள்.
-------------------------------------------------------------------

__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment