Tuesday 20 December 2016

[www.keralites.net] : 21-12-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் [3 Attachments]

 





Subject: 21-12-2016
திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
21-12-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
 
 
 
211216t.JPG

2o.12.2016.jpg
 
Subject:  111 Trees

பிரசவ வலி ஆரம்பமாகி  விட்டது
அந்தப் பெண்ணுக்கு ...
அறைக்கு வெளியே , கவலையுடன் காத்திருக்கிறார்கள் உறவினர்கள் ..
.
சற்று நேரத்தில் ... பிறந்த குழந்தையின் "குவா குவா" அழுகை சத்தம் ...
உள்ளே இருந்து ,
வெளியே எட்டிப் பார்த்த ஒரு பெண் சொல்கிறாள் :

"பெண் குழந்தை பிறந்திருக்கிறாள் .."

"ஆஹா .." என்று முகம் மலர்கிறார்கள்  வெளியே  காத்திருந்த  அத்தனை உறவினர்களும் ...!
அவ்வளவுதான் !
ஆரம்பித்து விட்டது கொண்டாட்டம்
அந்தக் கிராமத்தில் ..!

ஆம் ...  111 மரங்களை நடும் விழா ஆரம்பமாகி விட்டது .

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ?
ஒரு பெண் குழந்தை பிறந்ததை எந்த ஊரில்  இப்படி உற்சாகத்துடன் ,
ஊரோடு  சேர்ந்து கொண்டாடுகிறார்கள் ..?

நமது இந்தியாவில் ... ராஜஸ்தான் மாநிலத்தில் ... பிபிலாந்திரி என்ற கிராமத்தில் ...

ஆம் .. ஒரு பெண் குழந்தை பிறந்தால் , உடனடியாக  ஆரம்பமாகி விடும் இந்த "மரம் நடும் விழா". 
2006-
ம் ஆண்டில் இருந்து இது நடக்கிறது .
.
அதற்கு முன் ...
அந்த கிராமமும் நமது உசிலம்பட்டி போலத்தான் இருந்தது.

கர்ப்பத்தில் இருப்பது பெண்  என்று தெரிந்தால் கள்ளிப்பால் போல ஏதோ ஒரு பாலை கொடுத்து கதையை முடித்து விடுவார்கள் .
அதையும் மீறி பிறக்கும் குழந்தைகள் உடனே இறந்து விடும்அல்ல .. சிசு கொலை செய்யப்பட்டு விடும் .
.
இதற்கெல்லாம்  காரணம் ...?
வரதட்சணை கொடுமைகல்யாண செலவு ..!
.
அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட முதல் அடியை எடுத்து வைத்தார் அந்த கிராமத்தின்  தலைவர் ஷ்யாம் சுந்தர் .

கிராமத்து மக்களை கூட்டினார் .
தனது புதிய  "மரம் நடும்  திட்டம்பற்றி எடுத்துக்   கூறினார்  .

ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் , அந்த ஊரில் உள்ள எல்லோரும் சேர்ந்து  111 மரக் கன்றுகளை நடவேண்டும் . எல்லாமே பணம் தரும் வேம்பு , ரோஸ்வுட் , மா , நெல்லி மற்றும் மூலிகை மரங்கள் ...

இந்த மரங்களை அந்த கிராமத்து பெண்கள் பராமரிக்க வேண்டும்  . அதற்கான சம்பளத்தை கிராம பஞ்சாயத்து கொடுக்கும் .
.
கொஞ்சம் கணக்கு போட்டுப்  பாருங்கள் .

அந்தக் குழந்தை பதினெட்டு வயதை நெருங்கும்போது , இப்படி பராமரித்து வளர்க்கப்பட்ட  அந்த  111 மரங்களும் எவ்வளவு பணம் கொடுக்கும் மரங்களாக
 மாறி இருக்கும் ..?
அப்புறம் என்ன..?
கல்யாண செலவு பற்றி கவலைப்பட வேண்டியது இல்லையே .!
.
இது மட்டும் அல்ல ..!
பெண் குழந்தைகள் பிறந்தவுடன் பஞ்சாயத்திலிருந்து 21 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். பெற்றோர் தரப்பிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். இந்த மொத்தப் பணத்தையும் ,பிறந்த குழந்தையின் பெயரில் பிக்ஸட் டெபாசிட்டில் போட்டு விடுகிறார்கள் .

இதுவும் அந்தக் குழந்தைக்கு 18 அல்லது 20 வயதாகும்போது , அந்தக் குழந்தையின் படிப்பு செலவுக்கோ , கல்யாண செலவுக்கோ பயன்படுகிறது.
.

மொத்தத்தில் ..இப்போது அந்த ஊரே பச்சைப்பசேல் என்று மரங்களால் நிறைந்து இருக்கிறது . ஒரு காலத்தில் வேண்டாம் என்று வெறுக்கப்பட்ட  பெண் குழந்தைகள் , இன்று வீதி எங்கும் தேவதைகள் போல  உலவி வருகிறார்கள்  .
.
சரி ... தேவதைகளின் கிராமமாக இந்த கிராமத்தை மாற்றும் புதுமையான இந்த எண்ணம்  , அந்த கிராமத்தின்  தலைவர் ஷ்யாம் சுந்தருக்கு எப்படி உதித்தது ?
.
அது ஒரு சோகக் கதை .
பல ஆண்டுகளுக்கு முன் , அவருக்குப் பிறந்த பெண் குழந்தையும் ....  இறந்து போய் விட்டது .
ஆம் ... சிசு கொலை செய்யப்பட்டது .

அந்த நேரத்தில் அவரால் அதை தடுக்க முடியவில்லை . ஏனென்றால் அதுதான் அந்த கிராமத்தின் பழக்கமாக , அத்தனை ஆண்டு காலமாக இருந்து வந்தது .

அதற்குப் பிறகுதான் இறந்து போன தனது மகள் நினைவாக இந்த 111 மரங்கள் திட்டத்தை செயல்படுத்த பெரும் முயற்சி எடுத்து போராடி , இன்று அதில் மகத்தான வெற்றியும் கண்டிருக்கிறார் ஷ்யாம் சுந்தர் .
.

இருக்கட்டும் .

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என சொல்வார்கள் .

ஆனால் ... ராஜஸ்தானில் , அந்த கிராமத்தில் இன்று பல பெண்கள் உயிரோடு இருப்பதற்கு பின்னால் ....
ஷ்யாம் சுந்தர் என்ற ஒரு  ஆண் இருக்கிறார் .

ஆனால் ... அவரது இந்த திட்டத்தின் வெற்றிக்குப்  பின்னால் ...

பிறந்தவுடன் இறந்து போன அவர் மகள் ...

ஆம் ..ஒரு பெண்தான் இருக்கிறாள் !
--------------------------------------------------------------------
Thanks to Mr.V.Soman, my RECT 72 batch mate for posting this
inspiring message about 111 Trees for the birth of each female child.
- SIVA

Posted by: Soman <vsoman30@yahoo.com>

 
 
.
 

     Thank  You   
 Your appreciation  is my inspiration    
Ανε ǻ βlεssεδ δαy
 
 
C.DURAIRAJU
CHENNAI
indian flag photo:  indian-flag.gif
 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
image001.jpg 211216t.JPG image002.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment