Tuesday, 21 March 2017

[www.keralites.net] How to verify the authenticity of e-Stamp Paper?

__._,_.___

Posted by: Xavier William <varekatx@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (3)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] Fw: நெடுஞ்சாலைப் பயணம்

Subject:    நெடுஞ்சாலைப் பயணம்
 
அன்பானவர்களுக்கு 
 
கவிதை தினத்தில், நான்கு ஆண்டுகளுக்குமுன் விகடனில் வெளியான இந்தக் கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..
 
எஸ் வி வி 

நெடுஞ்சாலைப் பயணம் 
 
கடைசி வரிசைக்கு வாழ்க்கைப்பட்டு விட்டவர்களை 
முறத்தில் வைத்துப் புடைப்பது மாதிரி 
குலுக்கிப் போட்டு 
எடுத்துப் போகும் வேகப்  பேருந்து 
 
டயர்  சீட்காரர் 
அவ்வப்பொழுது போய் 
முன்னிருக்கையில் முட்டி மோதி 
தேய்த்துக் கொள்வார் வலிக்கும் நெற்றியை 
உறக்கம் கலையாமலே 
 
சன்னலோரப் பயணி 
வண்டிக்கு வெளியே 
சிதறி விழப் பார்க்கும் 
உடம்பின் பாகங்களை மீட்டெடுத்துக் கொள்வார் 
டாம் அண்ட் ஜெர்ரியில் வரும் பூனை மாதிரி 
 
ஓடிக் கொண்டிருந்த திரைப்படம் 
நிறுத்தப்பட்ட நேரம் கூடத் தெரியாத 
பாட்டியம்மா 
புருவத்தை நெரித்து 
யாரையோ தேடிய பார்வையிலேயே 
அவரறியாமல் தடுக்கி வீழ்வார் 
அடுத்த கட்ட தூக்கத்திற்குள் 
 
நித்திரை அருள் வந்து ஆடும் சாமியாடிகள் 
வரிசைகள் தோறும் 
கொலுவாய் வேறு உலகத்தில் இருக்க 
 
முன்புற கண்ணாடிக்கு வெளியே 
மையிருட்டில் மழைத் தூறல் மாதிரி 
சிதறும் வாகன விளக்குகளின் 
வெளிச்ச இழையோட்டத்தில் விரியும் 
நம்பிக்கையற்ற நீண்ட நெடிய வெளியில் 
யாரையோ துரத்திய படியும் 
யாரிடமிருந்தோ தப்பியவாறும் 
இரைச்சலோடு விரையும் பேருந்தில் 
 
ஒட்டுநருக்குப் பின் இருக்கையில் 
உறக்கம் வராத இந்தப் பேய் இரவில் 
உயிரைக் கையில் பிடித்தபடி நான்.
 
- எஸ் வி வேணுகோபாலன் 
 
நன்றி: ஆனந்த விகடன் (சொல்வனம்)
 
__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] 22-03-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் [3 Attachments]

Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
Hi  என்று அனுப்பாதீர்கள்
 
22-03-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
fountain different.gif
 
22317t.JPG

Subject: வராக்கடனா. . .? தராக்கடனா. . .?
 
இந்திய வங்கித்துறை சாதாரண பாமர மக்களிடமிருந்து பெருமளவில் வைப்பு நிதியாக குறைந்த அளவு வட்டிக்குப் பணத்தைப் பெற்று  பெரிய பெரிய முதலாளிகளுக்கும், கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கும் தொழிற்கடன் என்ற பெயரில் கோடி கோடிகளாய் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அளித்து வருகின்றது. அப்படிப்பட்ட கடன்கள் ,எந்த வகையிலும் திரும்ப வராமல் வங்கிகளுக்கு மிகப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதற்கு "மோசமான கடன்" என்று முன்பு பெயர் சூட்டி பின்பு கார்ப்பொரேட்  நிறுவனங்கள் மேல் உள்ள தணியாத பாசத்தால் "செயல்படாத சொத்து"  என பெயர் மாற்றி சூட்டப்பட்டுள்ளது.
 
இத்தகைய வராக்கடன் வங்கிகளுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறது.  வங்கிகள் ஈட்டும் இலாபத்தில் இந்த வராக்கடன் பெரும் பகுதியை விழுங்கி விடுகிறது. இத்தகைய நிலைமை வங்கிகளை நலிவடையச் செய்து திவாலை நோக்கி இழுத்துச் செல்லும் ஆபத்து உள்ளதுகடந்த மார்ச் 31ம்  தேதியோடு முடிந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த வாரக்கடன் ஏறக்குறைய ஏழரை இலட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை அனைவரும் உணர்ந்து கொள்ளலாம், அதிலும் தனியார்  வங்கிகளைவிட பொதுத்துறை வங்கிகளில்தான் வராக்கடன்  நிலுவை மிக அதிகமாக உள்ளது. வராக்கடனை திரும்ப செலுத்தாதவர்கள் ஏறத்தாழ அனைவரும் பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள்தான்.  சாதாரண மக்கள் தாங்கள் வாங்கிய கடனை பெரும்பாலும் நேர்மையாகவும், நாணயமாகவும் திரும்ப செலுத்தி விடுகின்றனர் 
 
மேலும் இத்தகைய வங்கிகளில் கடன் வாங்கிய  தொழிலதிபர்களின்  சேமிப்பு என்பது மிகவும் குறைவு தான். கடன்தொகை முழுவதும் சாதாரண மக்களால் சேமிக்கப்படும் பணத்திலிருந்து தான் தரப்படுகின்றது. இத்தகைய மக்களின் சேமிப்பை மிகக்குறைந்த வட்டியின் மூலம் தொழில்கடன் என்ற பெயரில் அனுபவிப்பவர்கள் இத்தகைய தொழிலதிபர்கள் தான்.ஆனால் கல்விக்கடன் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. மொத்த வராக்கடனில் 73 சதவிகிதத்திற்கு மேல் உள்ள வராக்கடன் ஒரு கோடி ரூபாயும் அதற்கு மேலும் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி கட்டாதவையாகும். கடந்த 2012 முதல் 2015 வரையான மூன்று நிதி ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் ஒரு இலட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் வராக்கடனை தள்ளுபடி செய்துள்ளன. இப்படி தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடனின் முழு விவரத்தைக்கூட வங்கிகள் மக்கள் பார்வைக்கு வெளியிட மறுத்து வருகின்றது,
இப்படி மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 78 கோடி கடன்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பிய போது, மத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவையெல்லாம் தள்ளுபடி அல்ல " write offs" என புது விளக்கம் கொடுத்து, வங்கிக் கணக்குகளில் அந்த தொகை இருக்காது. ஆனால் நாங்கள் அதை வசூலிப்பதை நிறுத்த மாட்டோம் என சொல்லி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கும் போது 
 
மகாகவி பாடலான .
" நெஞ்சில் உரமுமின்றி 
  நேர்மைத் திறமுமின்றி 
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே 
வாய்ச் சொல்லில் வீரரடீ"
 
 நினைவுக்கு வருகின்றது.
 
கடன் பெற்று விட்டு அதை திரும்பச் செலுத்தும் அளவிற்கு சொத்துக்களும், வசதிகளும் இருந்தும், செலுத்த மறுக்கின்றவர்களை  கடனை கட்ட தவறியவர்கள் என்றும், கடன் ஏய்ப்பாளர்கள் என்றும் நாகரீகமாக அழைத்து வருகின்றோம்.  இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து வராக்கடனை வசூல் செய்ய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. கடன் பெற்றவர்களும் வழக்கு, இழுத்தடிப்பு, தீர்ப்பாயம் செல்வது என காலத்தை  ஓட்டிவிடுகின்றனர். இப்படியான இலட்சக்கணக்கான கோடிகளை கடனாக பெற்று திரும்ப  செலுத்தாமல் இருப்பது மிகப்பெரிய பொருளாதாரக் குற்றமாகும். நமது நாட்டின் மிகப்பெரிய நிதித்துறையான வங்கித்துறையையும், நமது நாட்டின் பொருளாதாரத்தையும் சீர் குலைக்க வைக்கும்  இத்தகைய நிறுவனங்களின் மீதும், நிறுவனங்களின் இயக்குனர்கள் குழு மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து தான் ஒரே தீர்வு
ஆனால் சாதாரண மக்கள் குடிநீர் கட்டணம், மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் இணைப்பை துண்டிக்கின்ற அரசு, அபராதம் போட்டு    கறாராக வசூலிக்கின்ற அரசு, நகைக்கடன், கல்விக்கடன் வாங்கி கட்ட தவறியவர்கள் புகைப்படங்களை வெளியிட கூறும் அரசு, கோடிக்கணக்கான கடனை வரக்கடனாக வைத்திருக்கும் பெரும் முதலாளிகளை "தொழில் வளர்ச்சிக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் நியமனம் செய்கின்றது.
 
நமது நாட்டின் பிரதம மாதிரி மோடி அவர்கள் நமது'இந்திய அரசின் நிதி நிலையை உயர்த்தவும், ஏழை எளிய மக்களுக்கான நல திட்டங்கள் செயல்படுத்த நிதி அதிகமாக தேவைப்படுவதினால் பொதுமக்கள் தங்களின் கேஸ் மானியமான  ரூபாய் 250-  விட்டுக்கொடுக்குமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்ததை அனைவரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் இதுவரை 7.5 இலட்சம் கோடி 
வராக்கடனை செலுத்தாமல் ஏமாற்றும் பெரும் முதலாளிகளிடமும், கார்ப்பொரேட் நிறுவனங்களிடமும் அவர்கள் சட்டப்படி வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தவேண்டிய நிலுவைத்தொகையை செலுத்துமாறு ஒரு சின்ன கோரிக்கைகூட விடுக்கவில்லை என்பது அவரும், அவரது ஆட்சியும் யாருக்கானது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
 
இந்த வராக்கடன் சம்பந்தமான ஒரு பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச், " தனிநபர்கள் மற்றும் பெரும் கம்பெனிகளுக்கு வங்கிகள் வாரி வாரி வழங்கியுள்ள கடனை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ?  கோடிக்கணக்கான ரூபாய் கடனாக வாங்கியவர்கள் திவாலாகி விட்டதாக அறிவித்து விடுகின்றனர்.  ஆனால் ஏழை விவசாயிகளிடம்  தாங்கள் வாங்கிய ஆயிரக்கணக்கான கடனுக்காக அவர்களிடம் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. கடனை  கட்ட முடியாத விவசாயிகள் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்படுகின்றனர். பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக வாங்கிக்கொண்ட  கார்ப்பொரேட் நிறுவனங்களிடமிருந்து கடனை வசூலிக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதது ஆச்சரியம் அளிக்கின்றது என்றும் கூறி அரசுக்கு தங்களது கண்டனங்களை தெரியப்படுத்தி உள்ளது
 
ஆனால் மத்திய மோடி அரசோ இத்தகைய வராக்கடனை வசூல் செய்ய எந்தவிதமான சட்ட திருத்தமும் கொண்டு வரவும் தயாராக இல்லை. மேலும் இக்கடன்களை சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களுக்கு தள்ளுபடி விலையில் விற்றோ, அல்லது புதிதாக கெட்ட வங்கி ( BAD BANK ) என்ற பெயரில் வங்கி தொடக்கி அதன்மூலம் தள்ளுபடி விலையில் இந்த கடன்களை விற்கவோ அல்லது அக்கடன்களை இரத்து செய்யவோ முயற்சித்து வருகின்றது.
 
எனவேதான் வங்கிகளில் பணியாற்றும் 10 இலட்சத்துக்கு மேலான வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து 
 
> மக்களின் சேமிப்பையும், வைப்பு நிதியையும் கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு வாரி வாரி வழங்கி, அதை திரும்ப வசூலிக்க எந்த ஒரு முயற்சியும் செய்யாத  மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும்,
 
> பொதுப்பணத்தை சூறையாடியிருக்கும் பெரும் கடன்காரர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்றும்  
 
> பொதுத்துறை வங்கிகளை நலிவடையச் செய்து, புதிய தனியார் வங்கிகளை ஊக்குவிக்கும் மத்திய அரசின் செயல்களை கண்டித்தும்
 
> தொழிலாளர்களின் நலச் சட்டங்களை 5 தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான வேலை நிறுத்த உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கக்கூடிய வகையில் மத்திய அரசு கொண்டு வர இருக்கும் சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும் 
 
> அனைத்து தரப்பு மக்களையும் பாதித்த பண மதிப்பு இழப்பு நடவக்கையின் காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்ட பண இழப்பை ஈடுகட்டாததையும், இந்த நிகழ்வுகளின் காரணமாக  உயிரிழந்த பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்காததையும் கண்டித்தும்
 
> கூடுதல் பணிச்சுமையுடனும் , மனஉளைச்சலுடனும், விடுமுறை கூட எடுக்காமல்  நாடு முழுவதும் இரவு பகலாக ஓய்வில்லாமல்  மக்கள் பணியாற்றிய வங்கி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் எந்தவிதமான கூடுதல் ஈட்டுத் தொகையம் வழங்காததை கண்டித்தும் 
 
> வங்கிகளில் காலியாக உள்ள இரண்டு  இலட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் அந்த வேலைகளை ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் நிறைவேற்ற முயற்சிக்கும் நிர்வாகத்தின், அரசாங்கத்தின் போக்கை கண்டித்தும் 
 
28.02.2017 அன்று ஒரு மிகப்பெரிய வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தினர். மேலும் மேலும் இந்த மோடி அரசாங்கம் பொது மக்களின் சேமிப்பை சட்ட விரோதமாக சூறையாடியிருக்கும் பெரும் கார்ப்பொரேட் நிறுவங்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் ஆதரவான கொள்கைகளை கடைபிடித்தால் எங்களது போராட்டங்களும் தொடரும் என்று ஆர்ப்பரித்த வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது நமது உண்மையான தேசபக்த கடமையாகும்.
 
S.R.இளமாறன், மதுரை.
 
__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
22317t.JPG image002.jpg image001.gif

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] 22-03-2017 TODAY’S MESSAGE FROM TRICHY PRASANNAN Thailand Is Home to Some Jaw-Dropping Places to Visit [3 Attachments]

Wait, 
 
Animated Picture
 
My Whatsapp Number:   9791714474
If you want to join my whatsapp contact,
your name,
your place,
your mother tongue
should be mentioned
Don't send simply  Hi
 
22-03-2017  TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
chittukuruvi.gif
 
22317e.JPG
 
Subject:
Thailand Is Home to Some Jaw-Dropping Places to Visit
 
__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
22317e.JPG image001.gif image002.jpg