Friday, 17 March 2017

[www.keralites.net] 18-03-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் [3 Attachments]

 




Subject: : 18-03-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
Hi  என்று அனுப்பாதீர்கள்
 
 
18-03-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
cat fall down.gif
 
18317t.JPG
 
 
!! "காஞ்சி மகான் 
    கருணை "!! 
!! " Greatness of sage of Kanchi " !!
 
* Life- பிடிப்பே இல்ல பெரியவா...*
* No attachment in my life, Periyava.....*
 
பல வர்ஷங்களுக்கு முன் நடந்த ஸம்பவம்.
 
ஒருநாள் மடத்தில் பெரியவாளை தர்ஶனம் 
பண்ண "க்யூ"வில் நின்றிருந்தனர் 
ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை 
வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர்.
 
"பெரியவா..நா.. ஸர்வீஸ்லேர்ந்து ரிடையர்
 ஆய்ட்டேன்... கொழந்தேள்-ன்னு யாரும் 
கெடையாது. அதுனால, மடத்ல வந்து 
கைங்கர்யம் பண்ணணுன்னு ரொம்ப 
ஆசையா இருக்கு. அனுக்ரஹம் பண்ணணும்"
 
பேச்சில் உருக்கம், பணிவு
பக்கத்தில் வயஸான மனைவி.
 
"வாழறதுக்கு ஒனக்கு பிடிப்பு எதுவும் 
இல்ல-ன்னுதானே கவலைப்படற?"
 
"ஆமா........."
 
"எதாவுது கார்யம் குடுத்தா பண்ணுவியா?"
 
"உத்தரவிடுங்கோ பெரியவா
காத்துண்டிருக்கேன்"
 
அவரை அப்படியே விட்டுவிட்டு, அடுத்து வந்த 
மற்றொரு தம்பதியிடம் குஶலப்ரஶ்னம் பண்ண 
ஆரம்பித்தார். அவர்களும் வயஸானவர்கள்தான்
அவர்களுடைய பெண்ணும், கூட வந்திருந்தாள்.
 
"இவ, எங்களோட ஒரே பொண்ணு
இவளுக்கு கல்யாணம் பண்ணணும்
நல்ல வரன் வந்திருக்கு
...பெரியவாதான் ஆஸிர்வாதம் பண்ணணும்...."
 
கையை உயர்த்தி ஆஶிர்வதித்தார்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா
 இதை பார்த்துக் கொண்டிருந்தார்.
 
இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பினார்....
 
"Life- பிடிப்பு வேணுன்னியே! இதோ
......இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்-னு 
ஒன் ஸொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை!
 நீதான் கன்யாதானம் பண்ணணும்"
 
ரெண்டு தம்பதிகளும் முதலில் முழித்தார்கள்.
 பெண்ணின் பெற்றோர் நல்ல வஸதி 
படைத்தவர்கள்தான்! பின் எதற்கு 
யாரோ ஒருவர் செலவு பண்ணி
கன்யாதானமும் பண்ணணும்?.....
 
"செஞ்சுடறேன் செஞ்சுடறேன்....
பெரியவா உத்தரவு"
 
பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார்.
 
பெரியவா அவர் மனைவியை காட்டி
அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டினார்.
 
அவருக்கு புரிந்தது.........
 
"ஆமா, இவ என் ரெண்டாவது ஸம்ஸாரம்
மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவள... 
கல்யாணம் பண்ணிண்டேன்".
 
பெரியவா முகத்தில் இப்போது 
ஒரு தீவ்ரமான மாறுதல்!
 
"ஸெரி....ஒனக்கு மூத்த தாரத்தோடது
பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?......"
 
"இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு"!!!
 
எங்கேயிருந்து எங்கேயோ கொக்கி போட்டு 
இழுத்துட்டாரே! பெரியவாளுக்கு எப்டி தெரியும்?
 
ரொம்ப கூனிக்குறுகி, ஒத்துக் கொண்டார்.
 
"ஆமா...ஒரு பொண் கொழந்த இருந்தா..! 
இவ, சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தைய
 படாதபாடு படுத்தினதுனால
அந்தக் கொழந்தை சின்ன வயஸ்லேயே 
ஆத்தை விட்டு போய்ட்டா..!
 நானும் தேடாத எடமில்ல! போனவ போனவதான்...!"
 
துக்கத்தால் குரல் அடைத்தது.
 
"ம்ம்ம்ம்.. பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ
இதோ....... இந்தா! பிடிச்சுக்கோ
ஒன்னோட காணாமப் போன பொண்ணு
இவதான்! போ! அழைச்சுண்டு போயி... 
நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........."
 
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால்
இன்பமான அதிர்ச்சி!
 
என்னது? ..
 
இது ஸத்யம் ! ஸத்யம்!
 
பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் 
வாயை பிளந்தார்கள்!
 
உண்மைதான்!
 
" ஆமா..பெரியவா! ரொம்ப வர்ஷம் முந்தி
நாங்க ட்ரெய்ன்ல ஊருக்கு போய்ண்டிருந்தோம்
அப்போ ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல 
இந்தக் கொழந்தை அழுதுண்டு நின்னுண்டிருந்தா..!
 விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால அவளஅங்க தனியா விட மனஸு ஒப்பல...  
பொண் கொழந்தையாச்சே! அதான்,
 நாங்களே கூட்டிண்டு போயி
எங்க கொழந்தையா வளத்துண்டு வரோம்..."
 
பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் 
ஸந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண 
ஏற்பாட்டை பண்ணினார்கள்.
 
இப்போது அதிகமாக எல்லார் வாயிலும் 
அனுபவம் இல்லாமலே வரும் வாக்யம்
 "எல்லாமே pre planned " என்பது.
 
மஹான்களின் ஸந்நிதியில் அது ஸஹஜமாக,
 அனுபவத்திலும் வரும்.
 
" இந்தா...பிடி! பதினெட்டு வர்ஷத்துக்கு முன்னால
 தொலைஞ்சு போன ஒம்பொண்ணு!" என்று
 'திருப்பதி லட்டு' மாதிரி, பெற்றவரிடம் casual-லாக ஒப்படைக்க, பெரியவாளால்தான் முடியும்.
 
நம் வீடுகளில் கண்ணாடியை எங்கேயோ 
வைத்துவிட்டு, வீடு முழுக்க தேடியதும்
வீட்டில் யாராவது "இதோ இருக்கு" என்று 
எங்கிருந்தோ கண்ணாடியை எடுத்துக் குடுப்பது
 போல், ஸர்வ ஸாதாரணமாக cosmic level-ல் 
விளையாடக் கூடியவா, பெரியவா மாதிரி 
அவதார புருஷர்கள்தான்.
 
ஹர ஹர சங்கர 
ஜெய ஜெய சங்கர..
 
வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதாபரஞ்சுடரே!
 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை (25-12-2008)
 "அபூர்வ சங்கரர்"
 தன் மேன்மையான தவயோகத்தால் சுகபிரம்மரிஷிக்கு நிகரான நேர்த்தியோடு நம்மிடையே எளிமையான திருஉரு கொண்டு அருளும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா சாட்சாத் சங்கர அவதாரமே என்பது பல பக்தர்களின் அனுபவமாகின்றது.
 கும்பகோணம் ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் எனும் ஸ்ரீ பெரியவா பக்தர் இப்படி கூறுகிறார்.
 ஆதிசங்கரரின் சீடரான பத்மபாதர் தன் குருவை இன்னார் என்று புரிந்து கொண்டவராக "நாகங்கள், யானைத்தோல், புலித்தோல், சிவகணங்கள் முதலிய பரிவாரங்களுடனும், அஷ்ட ஐஸ்வர்யங்களுடனும், உமைபாகனாகவும் உக்ர ரூபத்துடனும், காலனை காலால் சம்ஹரித்தவரும், விநாயகருடன் கூடியவருமான கைலாயத்தில் இருக்கும் ஸ்ரீ சங்கரரே, மாற்று உருவத்துடன் இவ்வுலகில் சன்யாச கோலத்தோடு, சிஷ்ய பரிவாரங்களுடன், தன் சிவலோக ஐஸ்வர்யங்களை யாவும் துறந்தவராக ஸ்ரீ சங்கர பகவத்பாதாளாக அவதரித்ததினால் இவரே அபூர்வ சங்கரர்" என்று துதி செய்கிறார்.
       அந்த அபூர்வ சங்கரரே இன்று பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளெனும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளாய் பரம கருணை பொழிந்தருளிக் கொண்டிருக்கிறார் என்று ஸ்ரீ பெரியவாளை பூர்ணமாக சங்கரராய் அனுபவித்து சொல்கிறார்.
 
இவர் கண்ட ஒரு சம்பவம்.
 
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா சிவாஸ்தானத்தில் அருள் செய்து கொண்டிருந்த சமயம். பன்னிரெண்டு வயது சிறுவன் கருணாமூர்த்தியிடம் அடைக்கலமாக வந்து நின்றான்.
 
சிறுவன் கண்களில் நீர்மல்கியிருந்தது "பெரியவா! எனக்கு அப்பா இல்லே, என் தாயாரும், தங்கையும் பம்பாயில் ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அந்த வீட்டில் அம்மா சமையல் வேலை செய்கிறாள். என்னை மெட்ராஸில் கிறிஸ்துவ கான்வெண்டில் சேர்த்தார்கள். நான் எட்டாவது படிக்கிறேன். நிறைய மார்க்கு வாங்கறேன். இப்போ என்னை அவா கிறிஸ்துவ மதத்தில் சேருமாரும், எம். , வரைக்கும் படிக்க வைச்சு வேலை வாங்கி தருவதாயும் சொல்கிறார்கள்.
 
ஆனா எனக்கென்னவோ மதம் மாற மனசே இல்லை. மதம் மாறமாட்டேன். எனக்கு உபநயனம் நடக்கவேண்டும். எங்கம்மா கிட்டேயிருந்து நாலுமாசமா கடிதமே இல்லே. என் தாயும் தங்கையும் என்ன ஆனார்கள். எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை…"
 
சிறுவன் அழுதவாறே ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட்டான். அந்த சிறுவனை சிவாஸ்தானத்திலேயே இருக்கச் சொல்லி ஸ்ரீ பெரியவாளிடமிருந்து உத்தரவாயிற்று. பத்து பதினைந்து நாட்கள் நகர்ந்தன. சிறுவனுக்கு ஸ்ரீ பெரியவா எப்படி அருளப்போகிறார் யாருக்கும் புரியவில்லை.
 
ஒரு நாள் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க, நாற்பது பேர்கள் சிவாஸ்தானத்திற்கு வந்தனர். வந்தவர்கள் பம்பாயிலிருந்து வருவதாக கூறினர். ஸ்ரீ பெரியவாளை தரிசித்துவிட்டு திரும்பியும் போய்விட்டனர்.
 
ஸ்ரீ பெரியவா திரும்பி சென்றவர்களை கூப்பிடுமாறு உத்தரவிட்டார். எல்லோரும் வந்தனர். ஒவ்வொருவரையும் தங்களின் பெயரைச் சொல்லுமாறு ஸ்ரீ பெரியவா கேட்க, வந்திருந்த பக்தர்களுக்கு பெருமகிழ்ச்சியானது. நடமாடும் தெய்வம் தங்கள் பெயரை கேட்டு பிரத்யேகமாக அருள் செய்ததில் எல்லோருக்கும் பரம சந்தோஷம்.
 
இப்படி ஒன்றன் பின் ஒருவராக ஸ்ரீ பெரியவாளிடம் தங்கள் பெயரை சொல்லி வந்தபோது, ஒரு குறிப்பிட்ட நபர் தன் பெயரை சொன்னபோது, பத்து நாட்கள் தங்கியிருந்த சிறுவனை ஸ்ரீ பெரியவா கூப்பிட்டு வரச்சொன்னார்.
 
அந்த குறிப்பிட்ட நபரிடம், "பையனை திரும்பவும் குடும்ப நிலைமையை ஸ்ரீ பெரியவா சொல்லச் சொன்னார். அதை கேட்டதும் அந்த பெரிய மனிதர் நெகிழ்ந்து போனார். அப்பையனை முன்பேதும் அவர் பார்த்ததில்லை. ஆனால் பையன் சொன்ன விபரங்களிலிருந்து தன் வீட்டில் வேலை பார்த்து வந்தது அவனுடைய தாயாரும், சகோதரியும்தான் என்று ஊகிக்க முடிந்தது.
 
உடனே அவர் ஸ்ரீ பெரியவாளிடம் பையனை முன்னே பின்னே பார்த்ததில்லே, இவனோட அம்மா எங்க வீட்லேதான் பெண்ணோட இருந்தா. ஆனா அந்த அம்மாள் காலமாகிவிட்டாள். நாலு மாசமாறது. உடனே இவன் படிக்கிற கான்வென்ட்டிற்கு தகவல் கொடுத்தேன். பதிலே இல்லேஅதனால இவனோட தங்கையை கொண்டே காரியங்களை செய்ய வைச்சேன்.
 
இப்போ ஸ்ரீ பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு நேரே மெட்றாஸ் போய் கான்வென்ட்டிலே இவனைப் பத்தி கேட்கலாம்னுதான் இருந்தேன்ஆனா ஸ்ரீ பெரியவா அனுக்ரஹத்தாலே பெரியவா சன்னதியிலேயே இவன் கிடைச்சுட்டான்" என்று மெய்ச்சிலிர்க்க அந்த மனிதர் கூறி முடித்தார்.
 
உடனே ஸ்ரீ பெரியவா "இந்த பையனை உன் கூட பம்பாய்க்கு அழைச்சுண்டுபோ……அவனோட தாயாரோட சம்ஸ்காரங்களை செய்து வை. அவனையும் உன் பிள்ளைப்போல் பாவிச்சு படிக்க வை. அவனது தங்கைக்கும் விவாஹம் செய்து கொடு. இது உன் கடமை" என்று அன்பே உருவான தெய்வம் சிறுவனின் வாழ்க்கைக்கு பூர்ண வெளிச்சம் காட்டி அவரிடம் உத்தரவிட்டருளியது.
 
எங்கே, எப்படி, யார் யாருக்கு என்னென்ன தொடர்பென்று ஈஸ்வரரல்லாமல் வேறு யாருக்கு தெரியக் கூடும்?


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
image001.jpg 18317t.JPG image002.gif

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___