காஞ்சி கருணைக்கடல் இந்துமத தத்துவங்கள் பற்றி வேதங்களில் கூறிய விதிகள், சாஸ்திரங்கள் கூறும் யுத்திகள் பற்றி காஞ்சி பெருயவர் கூறிய யுத்திகள்
மதச்சின்னங்கள் மானிட வாழ்விற்கான அவசியங்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றியும், காலப்போக்கில் அதன் வளர்ச்சி்க்கு ஏற்ற மாற்றம் ஏற்பட்டாலும், அச்சின்னங்களால் ஏற்படும் முக்கியத்துவம் அவசியமாகிறது.
இந்து சைவ மதத்தின் அடையாளங்களாவன; நெற்றில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சம், சடாமுடி, திருஐந்தெழுத்து நாமம்
விஷ்ணு மதத்திற்கு நெற்றியில் திருமஞ்சன நாமம், துளசி மாலை, வேதங்கள் பயின்றதன் பொருள் உணர்த்தும் தலைகுடுமி,
கிருஸ்துவ மதத்தினர், சிலுவை மாலை
முஸ்லீம் மதத்தினர் முகத்தில் காணும் குறும்தாடியும் தலைப்பாகையும்.
அவரகள் அணியும் சமய அடையாளங்களினால் அவரவர்கள் தன் மதத்தின் மேல் கொண்ட மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்பதில் அதன் சின்னங்களே விளக்கும், வைதிகம் மனம் சார்ந்ததா? உடை சார்ந்ததா? என்பதல்ல, அதன் பயன்கள் தரும் நன்மைகளே நமக்கு பாதுகாப்பு, பெண்கள் அணியும் குங்கும் அவரகளுக்கான மங்கள தத்துவத்தையும், சுமங்கலி என்ற அடையாளத்தையும் நமக்கு காட்டுகின்றன.
அவை ஆன்மீக தத்துவத்தை விளக்கினாலும், கெட்ட செயல்கள், துர்ஆவிகள் சம்பந்தமான தீய செயல்களிலிருந்து அவரகளை காப்பாற்றும் சக்தியையும் அளிக்க வல்லன. தற்கால கட்டத்தில் பள்ளிகளுக்கு சீருடையும், காவல்துறை மற்றும் அந்தந்த துறைகளுக்கான அடையாள சீருடைகளும் மற்ற அடையாளங்களும் அதன் முக்கியத்துவத்தை விள்க்குவதை நாம் அனுதினமும் காணலாம் நம் ஆத்மா மூன்ற லோகங்களை அடையும் வல்லமை பெற்றது.
1. பூலோகம் / தற்போது நாம் வாழும் லோகம்
2. தேவலோகம்/ இது சொர்க்கலோகம், வைகுண்டலோகம், சிவலோகம், எமலோகம், என்ற புண்ணியலோகமாகும்
3. நரகலோகம்/ இது நாம் பூலோகத்தில் நாம் பண்ணிய பாவ கர்மங்களால் நமக்கு கிடைக்கும் தண்டனை லோகமாகும். இந்த மூன்று லோகங்களிலும் சிறந்தது நாம் வாழு்ம் இந்த பூலோகமே என்கிறார் பெரியவர், ஏனெனின், இங்கு தான் நாம் நல்லதோ அல்லது கெட்டதோ அவரவர் இஸ்டத்திற்கு செயல்பட வாய்ப்பு உள்ளது இங்கு நாம் செய்யும் பாவ புண்ணிய ெசயல்களுக்கு தக்க நமக்கு மற்ற இரு லோகங்களும் கிடைக்கும், மேலும் நம் ஆன்மிக அருளாளர்கள் இவ் லோகத்தில் மீண்டும்மீண்டும் பிறவா நிலையும் வேண்டும் என்கிறார்கள், அவ்வாறு பிறந்தால் இறைவரை மறவா நிலை வேண்டும் என்றனா்.
இவ் பூலோக வாழ்வில் மானிட பிறவி, மாயையிலிருந்து விடுபட, இனியும் பிறவா நிலை பெற, பூலோக வாழ்வில் ஈ்டேற ஆத்மாவிற்கு எட்டு குணங்கள் வேண்டும் என்கிறார். அவை ;
1. தயை / ஈகை. என்ற பிறஉயிர்களிடத்தில் காட்டும்அன்பு
2.சாந்தி / அமைதி என்ற ஆரவாரம் அற்ற குணம்
3.அனுசூயை / பொறாமையற்ற குணம்
4.செளதம் / சுத்தம் புறஉடல் சுத்தம் அக சுத்தம்
5.மங்களம் / அமங்கலமற்ற, நல்ல செயல், பேச்சு
6.அனாயகம் / எதிலும் பதட்டமற்ற குணம்
7.அகார்ப்பம் / தாராள குணம், கஞ்சத்தனமற்ற குணம்
8.அப்பிரஹா / ஆசையற்ற குணம்
இவ் பூலோக வாழ்வில் நம் ஆத்மாவிற்கு மேற்கண்ட எட்டு குணங்கள் கொண்டு வாழ்ந்து வந்தால் இனி இந்த லோகத்தில் பிறவா நிலையும் தேவலோகம் அடையலாம் என்கிறார். திருச்சிற்றம்பலம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர: தவயோக சித்தாந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாச்ரமஸ்தான மெய் ஞான குருவே!!
தவயோக சித்தாந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாச்ரமஸ்தான மெய் ஞான குருவே!! நின்னை அடைவதுதான் ஆன்மா கொண்ட பலனே ஸ்ரீ மஹாபெரியவா தவப் பாதசரணம்.